புதுதில்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் காணவில்லை. காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜே.என்.யு. மாணவர்கள் கூறுகின்றனர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து காணாமல் போன நஜீப் அகமதுவை கண்டுப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதன்கிழமை நள்ளிரவில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நுழைவு வாயில்களை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இது தொடர்பாக ஜே.என்.யு. பல்கலைக்கழக துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கப் பிரதிநிதிகளிடம் நாங்கள் பேசியிருக்கிறோம் என்றும் காணாமல் போன மாணவர் நஜீபை கண்டுபிடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன  என்று ட்வீட்களில் பதிவு செய்துள்ளார். 


பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைக்கும் புதிய கோரிக்கை என்னவென்றால், மாணவர் நஜீப் மாயமானது தொடர்பாக புதிய எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்பதே.