Mizoram Elections 2023: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.  இதில் மிஸோரத்தை தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் என மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைக்கிறது. அதாவது, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்தது எனலாம். தெலங்கானா ஆளும் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்துள்ளது எனலாம். 2014ஆம் ஆண்டுக்கு பின் காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைக்க உள்ளது. 


இதில் மிசோரம் வாக்கு எண்ணிக்கு இன்று நடைபெறுகிறது. முன்னதாக டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை திட்டமிடப்பட்டது, ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமூகத்தின் பல்வேறு தரப்பில் இருந்து பிரதிநிதித்துவம் கிடைத்ததை அடுத்து டிசம்பர் 4ஆம் தேதி அதாவது இன்றைக்கு மாற்றப்பட்டது.


மேலும் படிக்க | மோடி பிராண்ட் வெற்றி பெற்றது! ஹாட்ரிக் வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக


ஞாயிற்றுக்கிழமை அதிகமானோர் மக்கள் பிரார்த்தனைகளில் கலந்துகொள்வதால் கிறிஸ்தவர்களுக்கு ஒரு நல்ல நாள் என்று கூறி, வாக்கு எண்ணும் தேதியை மாற்றுமாறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தனர். மிசோரம் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மிசோரமில் முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணியை (MNF) சேர்ந்த முதலமைச்சர் ஜோரம்தங்கா உள்ளார். மற்ற கட்சிகளான சோரம் மக்கள் இயக்கும் (ZPM), காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை களத்தில் உள்ளன.


கருத்துக் கணிப்பில் வந்தது என்ன?


ஆக்சிஸ்-மை இந்தியா கருத்துக்கணிப்பு ஜோரம் மக்கள் இயக்கத்திற்கு (ZPM) பெரும்பான்மையை வழங்கியது. குறிப்பாக, மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ZPM 28-35 இடங்களையும், MNF 3-7 இடங்களையும், காங்கிரஸ் 2-4 இடங்களையும் வெல்லும் என கூறப்பட்டது. கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 0-2 இடங்கள் கிடைத்தன. 


சி-வோட்டர் கருத்துக்கணிப்பு MNFக்கு 15-21 இடங்களும், ZPMக்கு 12-18 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 2-8 இடங்களும் மற்றவர்களுக்கு 0-5 இடங்களும் கிடைத்தன. ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு MNFக்கு 10-14 இடங்களும், ZPM க்கு 15-25 இடங்களும், காங்கிரஸுக்கு 5-9 இடங்களும், BJP க்கு 0-2 இடங்களும் கிடைத்தன. 


வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன?


தற்போதைய நிலவரப்படி, ZPM 27 தொகுதிகளிலும், ஆளும் MNF 10 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. இது மதியம் 12.30 மணி நிலவரமாகும். மெஜாரிட்டிக்கு 21 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், எதிர்கட்சி ZPM ஆட்சியமைக்கும் என தெரிகிறது.


ZPM கோலாசிப், தாவி, ஐஸ்வால் மேற்கு-I, ஐஸ்வால் மேற்கு-II, துய்சாங் மற்றும் தெற்கு துய்புய் தொகுதிகளில் வெற்றி பெற்று மற்ற 20 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ZPM முதல்வர் வேட்பாளர் லால்துஹோமா கூறுகையில், "தனது கட்சியின் செயல்பாட்டில் ஆச்சரியமில்லை, இதை தான் எதிர்பார்த்தேன். முழு முடிவுகள் வெளிவரட்டும், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது" என்றார்.


மேலும் படிக்க | தெலுங்கானா தேர்தல்... முன்னாள் - இன்னாள் முதல்வர்களை தோற்கடித்த பாஜக வெங்கட் ரமண ரெட்டி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ