நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்க மோடி அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவையின் முடிவுகள் குறித்து தகவல் அளிக்கும் போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார். இந்த மருத்துவக் கல்லூரிகள் 24 ஆயிரம் கோடி செலவில் கட்டப்படும் என்று ஜவடேகர் கூறினார். இந்த மருத்துவக் கல்லூரிகள் 2020-21க்குள் கட்டப்படும். மருத்துவக் கல்லூரிகள் இல்லாத இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார். இதன் மூலம் 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும்.
அதேபோல கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். விவசாயிகளுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்படும். இந்த மானியம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குக்கு செல்லும் எனவும் தெரிவித்தார்.
பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை உள்ள கட்டமைப்பை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என்றும் கூறினார்.