விலை குறையாது! Petrol, Diesel மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்திய மத்திய அரசு
கச்சா எண்ணெய் வீழ்ச்சி மக்களுக்கு பயனளிக்காது. ஏனென்றால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மீண்டும் அதிகரித்துள்ளது.
புது டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல், செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிகரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை எட்டு ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மேலும், பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை ரூ .2 ஆகவும், டீசல் மீது ரூ .5 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அதிகரிப்பு மூலம், பெட்ரோல் மீதான வரி ரூ .10 ஆகவும், டீசல் மீதான ரூ .13 ஆகவும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 10 மற்றும் 13 ரூபாய் அதிகரித்தது:
மத்திய அரசாங்கத்தின் முடிவுக்குப் பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 10 மற்றும் 13 ரூபாய் அதிகரித்தது. ஆனால் அந்த சுமை சாதாரண மக்களுக்கு வழங்கப்படாது. கலால் வரி அதிகரிப்பு என்பது பொதுவாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்கும். இருப்பினும், இது சர்வதேச விகிதங்களின் வீழ்ச்சியுடன் சரிசெய்யப்படும் மற்றும் அதன் விலைகளில் அதிகரிப்பு இருக்காது.
கச்சா எண்ணெயின் விலையில் பெரும் சரிவு:
கொரோனா வைரஸ் மற்றும் அதிக எண்ணெய் உற்பத்திக்கான அமெரிக்கா -ரஷ்யா போட்டி காரணமாக, கச்சா எண்ணெயின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கணிசமான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. ஆனால் முந்தைய காலத்தைப் போல இந்த முறை குறைந்து வரும் சர்வதேச எண்ணெய் விலையின் பயனை மத்திய அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு பயன்படுத்துவதை நிறுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ்:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பல நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டதால், எண்ணெய் தேவை குறைந்தது. இதனால் கடந்த மாதம், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 18.10 டாலராக குறைந்தது. இது 1999 க்குப் பிறகு மிக அதிக அளவில் குறைந்த விலையாகும். இருப்பினும், அதன் பின்னர் விலைகளில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டது. அது ஒரு பீப்பாய்க்குடாலர் ($) 28 ஐ எட்டியது.