பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கி சர்தார் படேலின் கனவை நிறைவேற்றி உள்ளோம்: பிரதமர்
மத்திய அரசாங்கம் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கி சர்தார் படேலின் கனவை நிறைவேற்றி உள்ளோம் என சுதந்திர தின உரையில் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி: 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கோபுரங்களில் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றி வருகிறார். அப்பொழுது அவர், புதிய அரசாங்கத்தை உருவாகி 10 வாரங்கள் மட்டுமே ஆகின்றன, ஆனால் பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது எனக் கூறினார்.
அவர் கூறியது, மத்திய அரசாங்கம் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கியது. இது இந்த அரசின் மிகப்பெரிய சாதனை ஆகும். சர்தார் படேலின் கனவை நிறைவேற்றி உள்ளோம். 70 ஆண்டுகளில் செய்யப்படாத பணிகள் 70 நாட்களில் நிறைவு செய்யப்பட்டன. நாங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்க்கான வழிகளை எற்ப்படுத்தி வருகிறோம். அதை மூடிமறைக்க விரும்பவில்லை. முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம், முஸ்லிம் பெண்கள் கண்ணீரைத் துடைத்துள்ளோம். பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு சட்டங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் கொடுத்த வேலைகளை செய்தான், நான் இங்கு வந்தேன். எனக்கு சொந்தமாக எதுவும் இல்லை.
2014க்கு முன்னர் நாம் னைவரும் ஏமாற்றப்பட்டோம் என்று பிரதமர் மோடி கூறினார். 2019 தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனக்காக மக்கள் போராடினார்கள். நாங்கள் அனைவருக்கு சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி என்ற மந்திரத்தை எடுத்துக்கொண்டோம்.
370 வது பிரிவு குறித்து பேசிய அவர், நாங்கள் சிக்கல்களைத் தவிர்க்கவோ தடுக்கவோ இல்லை என்றும், 370 மற்றும் 35 ஏ பிரிவு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட சில நாட்களில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது நம் அனைவரின் பொறுப்பாகும். 70 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சி பிரிவினைவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது என்று பிரதமர் மோடி கூறினார். 70 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கட்சி குடும்பவாதத்தை வளர்த்தது. முந்தைய அரசாங்கத்தின் முயற்சிகள் விரும்பிய பலனைத் தரவில்லை என காங்கிரஸ் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில கட்சிகளை குறிவைத்து பேசினார்.