புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று ஜப்பான் சென்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் பயணத்தின்போது இருநாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதோடு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று தெரிகிறது.


அங்கு நடைபெறும் இருநாடுகள் இடையிலான வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்கிறார். ஜப்பான் மன்னர் அகிடிடோவை மோடி சந்திக்கிறார்.அங்கு இருநாடுகளின் முக்கிய வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்து தொழில் மற்றும முதலீடு குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 


ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்துப் பேசும் மோடி, பொருளாதாரம், ராணுவம், அறிவியல் ஆய்வு ஆகிய துறைகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்க உள்ளார். இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


பின்னர் பிரதமர் அபேவுடன் புகழ்பெற்ற ஷிண்கன்சென் புல்லட் ரயிலில் கோபே நகருக்கு செல்கிறார். மேலும் அதிவேக ரயில்களை உற்பத்தி செய்யும் கவாஸ்கி ராயில் தொழிற்சாலையை அவர் பார்வையிடுகிறார். இந்தப் பயணத்தின் போது அணுசக்தி நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கும் வகையில் இருநாடுகளுக்கும் இடையில் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.