இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.15 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு முதலில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். அதன்பிறகு நேற்று இரவு பிரதமர் மோடி அவருக்கு விருந்தளித்தார்.


அதை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்திய பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், பிரதமர் மோடி மிகப்பெரும் தலைவர் என்றும் வர்ணித்துள்ளார்.


மேலும், அவர் கூறுகையில்;- இந்தியா அதன் சொந்த விருப்பங்களை தேர்வு செய்யட்டும். எனினும் பயங்கரவாதத்தை கையாள இரண்டு வழிகள் உள்ளன. உளவுத்தகவலின் அடிப்படையில் பயங்கரவாத செயலை தடுக்க வேண்டும் இரண்டாவது, கொலைகாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்றார்.


 இருப்பினும், பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலுக்கும் ஆதரவளிக்கும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளார்.“ நான் வெளியுறவுதுறை மந்திரியாகவோ அல்லது தூதரக அதிகாரியாகவோ ஆவதற்கு முயற்சிக்கிறேன்” என பதிலளித்தார். மேலும், இந்திய பிரதமர் மோடி, மிகப்பெரும் தலைவர் எனவும், தனது நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக கடுமையாக உழைக்கிறார் எனவும் தெரிவித்தார். 


அதன் பின், டெல்லியில் இன்று நடைபெற்ற உள்ள பல்வேறு அரசு துறை சார்ந்த கூட்டங்களில் பெஞ்சமின் நேதன்யாகு கலந்து கொள்ள உள்ளார். அதற்கான விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றது.