புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் இன்று தனது 92-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 


டிவிட்டரில் வாஜ்பாய்க்கு வாழ்த்து தெரிவித்த மோடி, மக்களின் அன்பிற்கும் பெரும்திப்புக்கும் உரிய அடல்-ஜிக்கு, அவரது தன்னிகரற்ற சேவையும், தலைமையும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக திகழ்ந்துள்ளது. அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


 



 


 



 


மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடல் பிகாரி வாஜ்பாய் உடன் இருந்த ஒரு வீடியோவும் டிவிட் செய்துள்ளார்.