காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திரர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூச்சுத்திணறல் காரணமாக இன்று சித்தியடைந்தார்.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூச்சுத்திணறல் காரணமாக இன்று சித்தியடைந்தார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார் ஜெயேந்திரர். கடந்த மூன்று மாதங்களாகவே உடல் நல குறைவுடன் காணப்பட்டு வந்துள்ளார் ஜெயேந்திரர்.
காஞ்சி மடத்தின் 69வது சங்கராச்சாரியாராக இருந்தவர் ஜெயந்திரர். இவருக்கு வயது 82. இவருடைய இறப்பை அறிந்த பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் காஞ்சி மடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவர்டைய மறைவிற்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வரராஜ், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, .எஸ்.வி.சேகர், மதுரை ஆதீனம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ள நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில்:-