ZeeNewsExclusive: Zee News தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடியின் சிறப்பு நேர்காணல்! - ஒரு பார்வை
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜீ செய்திகள் தொலைக்காட்சியின் ப்ரதியேக நேர்காணலில் பங்கேற்றார்.
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜீ செய்திகள் தொலைக்காட்சியின் ப்ரதியேக நேர்காணலில் பங்கேற்றார். சுமார் 70 நிமிடங்கள் நடைப்பெற்ற நேர்காணலில் நெரியாளர் சுதிர் சௌத்ரி-யால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வியக்கவைக்கும் அளவிற்கு பதில்களை அளித்தார் நம் பிரதமர்!
அவற்றுள் சில...
GST., பணமதிபிழப்பு மற்றும் பட்ஜெட்!
GST மற்றும் பணமதிப்பிழப்பு இந்து இரண்டு விவகாரங்களைத் தவிர வேறு விவகாரங்களில் பாஜக மீது குறைகூற முடியுமா?... பாஜக திரம்படவே தனது ஆட்சியை நடத்திவருகிறது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பாஜக-வால் செய்யப்பட்ட சாதனைகள் கொஞ்சமல்ல,.. நிதி சேர்க்கையல், கழிப்பறை கட்டுமானம் மற்றும் மின்சாரமயமாக்கல் போன்ற பலர் பல திட்டங்களில் அரசு பல நாட்களாக தொடர்ந்து வேலை பார்த்து வருகின்றது.
GST மற்றும் பணமதிப்பிழப்பு இந்து இரண்டு விவகாரங்களைத் தவிர வேறு விவகாரங்களில் பாஜக மீது குறைகூற முடியுமா?... நாட்டில் 30-லிருந்து 40 சதவிகிதம் மக்கள் வங்கி சேவைக்கு அப்பால் இருந்தனர், அவர்களை வங்கி கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது ஆட்சியின் சாதனை இல்லையா?
பள்ளிகளில் கழிவரை இல்லா காரணத்தால் ஆயிரக்கணக்கான பெண்கள் பள்ளிக்கு வருவதை தவிர்தனர். அவர்களை பள்ளிக்கு கொண்டு வர அரசாங்கத்தால் கழிவரை கட்டப்பட்டது சாதனைய இல்லையா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்!
ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்து குறித்து...
நேர்காணலின் போது, பிரதமர் மோடி, பொதுத் தேர்தல்கள் மற்றும் மாநில தேர்தல் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து நடத்துவதற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.
வெவ்வேறு கால கட்டங்களில் நடத்தப்படும் தேர்தல்களினால், ஆளும் அரசாங்கத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்த கூட்டுத் தேர்தல் ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் எனவும், இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக வைப்பதன் மூலம் செலவுகள் மற்றும் ஆட்கள் சுமை குறைக்கப்படும் என தெரிவித்தார்.
பாராளுமன்றம், சட்டசபை, குடிமை மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்கள் ஒவ்வொன்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை என ஒரு மாத காலத்திற்கு பணி செய்யப்படுகிறது. இதனால் பணம், வளங்கள் மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றைக் விரயம் ஏன்படுகிறது.
ஒரு பெரிய பிரிவு பாதுகாப்புப் படை, அதிகாரத்துவம் மற்றும் அரசியல் இயந்திரங்கள் என ஒரு பெரிய படை 100, 150 முதல் 200 நாட்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உழைக்க வேட்டியுள்ளது!
"தேர்தல்கள் ஒன்றாக நடந்தால், இத்தகைய பெரும் சுமை இருந்து நாடு சுதந்திரமாக இருக்கும்," என்று அவர் தெரிவித்தார்!
அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து...
தனது உடலின் ஒவ்வொரு அணுவும் நாட்டிற்கு கடன்பட்டுள்ளதாகவும், நாட்டின் மக்களுக்காக பணியாற்றுவதற்கு அர்பனிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "ஒரு சாதாரண மனிதனின் கண்களில் நான் அவரது திருப்தியை நான் காணும்போது என்னுள் ஒரு புது உத்வேகம் பிறக்கிறது"
ஆட்சியின் மீது மக்கள் விமர்சனங்களை வைக்கும் போது அதை குறையென கருத முடியாது. மக்கள் வைக்கப்படும் விமர்சணங்களில் இருந்து குறைகளை உனர்ந்து அவற்றில் இருந்து நம்மை நாம் உயர்த்திக்கொள்ள தான் வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில், அனைத்து நேரங்களிலும் விமர்சனங்கள் வைக்கப்படுவதில்லையே... நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், விவசாய வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி மற்றும் (பங்கு) சந்தை பற்றி வளர்சி குறித்த நிலைபாடுகளில் நம் அரசு பாராட்டப்பட்டு தானே வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதி அரசியலின் ஆபத்துக்கள்!
நேர்காணலின் போது சாதி அரசியலின் அபாயங்களைப் பற்றியும் பிரதமர் மோடி பேசினார், இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது.. "சாதி அரசியல் இந்தியாவின் துன்பகரமான நிகழ்வு ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தற்கு காரணம் சாதிய அரசியல் தான்"
வேலை உருவாக்கம் குறித்து!
ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து வினவுகையில், அவர் "சாதாரணமாக நிகழ்ந்து வரும் நிகழ்வு, சுமார் 70 லட்சம் மக்கள் இதுவரை பிராவிடன் ப்ண்ட் திட்டத்தின்கீழ் பதிவு செய்து பயன்பெற்றுள்ளனர். முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் இதுவரை 10 கோடி மக்கள் இலவச கடன் வாங்கி பயன்பெற்றுள்ளனர், அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வேலைகள் உருவாக்கப்படுகின்றன வேறு விடயம்.
நம் ஆட்சியில் வேலை வாய்புகளை கொடுப்பதை விட, தானைக தொழில் தொடங்கி மற்றவருக்கும் வேலை வாய்புகளை உருவாக்கிக்கொள்ளும் அளவிற்கு மக்களுக்கு வாய்பளிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்
2019 மக்களவை தேர்தல் குறித்து...
2019 மக்களவை தேர்தல் குறித்து வினவுகையில்., "எங்கள் தேர்தல் திட்டமானது ஒரு கட்சியின் முன்னேற்றத்திற்கான திட்டமோ, அல்லது ஒரு தனிமனிதனின் முன்னேற்றத்திற்கான திட்டமோ அல்ல... ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டம்" என தெரிவித்தார்.
மேலும் மக்களவை தேர்தலில் வெற்றிப்பெறுவீர்களா என கேட்கையில் "வெற்றியை பற்றி எனக்கு சிந்திப்பதற்கு எனக்கு நேரமில்லை, அதைவிட முக்கியமாக 125 கோடி மக்களைகுறித்து நான் சிந்திக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்..
மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்த இந்த நேர்காணலின் தொகுப்பினை ஜீ நியூஸ் தொலைக்காட்சியில் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணியளவில் காணத்தவராதீர்கள்!