Molnupiravir: கொரோனா மருந்தை எங்கே வாங்கலாம்; விலை என்ன..!!!
சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா மருந்தான மோல்னுபிராவிர் என்ற மாத்திரையின் விலை, சந்தையில் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.
புதுடெல்லி: கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தான் மோல்னுபிராவிர் இன்று முதல் இந்திய சில்லறை மருந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தின் பயன்பாட்டிற்கு அரசாங்கம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது அனைவரும் அறிந்ததே.
மருந்தின் விலை
இந்த மருந்தின் விலையைப் பற்றி கூறுகையில், மருந்துக் கடையில் மோல்னுபிரவீர் கேப்ஸ்யூல் ஒன்று, 63 ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின் அடிப்படையில் மட்டுமே மருந்தை விற்பனை செய்ய முடியும் என்று மருந்து கடைகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ALSO READ | CORBEVAX , COVOVAX தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி..!
மோல்னுபிரவீர் மருந்துக்கு அனுமதி கிடைத்தது
மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) நிபுணர் குழு சமீபத்தில் அவசரகாலச் சூழ்நிலைகளில் கொவிட் மருந்தான மோல்னுபிராவிர் மாத்திரையை சிகிச்சைக்கு உபயோகிக்க பரிந்துரைத்தது.
மருந்துகள் நிபந்தனைகளுடன் விற்கப்படும்
கோவிட்-19 அவசரநிலை மற்றும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டில் அவசரகாலச் சூழ்நிலைகளில் மோல்னுபிராவிர் மருந்தின் உற்பத்தி மற்றும் விற்பனையை, கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த மருந்தை 'SPO2' 93 சதவிகிதம் உள்ள வயது முதிர்ந்த நோயாளிகளுக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்பு போன்ற நோய் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த மருந்தை கடைகளில், மருத்துவர்களின் பரிந்துரையீஇல், மருந்து சீட்டின் அடிப்படையில் மட்டுமே விற்க வேண்டும். இந்த மருந்தை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொடுக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
மருந்தின் செயல் திறன்
மருந்தின் செயல் திறன் குறித்த அறிக்கையை வெளியிட்ட நிறுவனம், நாடு முழுவதும் 29 நகரங்களில் 1,218 நோயாளிகளுக்கு மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான D. ஸ்ரீநிவாஸ் ரெட்டி கூறுகையில், சோதனை முடிவுகளின் படி, 5 நாட்கள் சிகிச்சை காலத்தில் கொரோனா பாதித்த நோயாளியின் வைரஸ் பாதிப்பை குறைப்பதில் மோல்னுபிராவிர் பயனுள்ளதாக இருந்தது என்றார்.
ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR