Monkeypox: இந்தியாவில் இன்னொரு நபருக்கு குரங்கம்மை... கேரள நபருக்கு பாதிப்பு உறுதி!
Monkeypox In India: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.
Monkeypox In India: குரங்கம்மை தொற்று பரவல் குறித்து சமீ உலக சுகாதார மையம் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்றின் Clad1 வைரஸை குறிப்பிட்டு இந்த அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் Clad2 மற்றும் DRC போன்ற பிற வேரியண்ட்களும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த குரங்கம்மை Clade1 தொற்று ஆப்பிரிக்க கண்டத்தின் கென்யா, உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, புருண்டு, ருவாண்டா உள்ளிட்ட நாடுகளில் அதிக பரவல் காரணமாக கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 120க்கும் மேற்பட்ட நாடுகளில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை இந்த குரங்கம்மை தொற்று பரவியிருப்பதாக WHO கூருகிறது. மேலும், இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோரை இந்த தொற்று பாதித்துள்ளது, 22 பேர் உலகம் முழுவதும் இதனால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 2ஆவது நபர்...
இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் குரங்கம்மை நோயால் 30 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் Clade2 தொற்று பாதிப்பே இருந்தது கண்டறியப்பட்டது. அந்த வகையில், தற்போது குரங்கம்மை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை பரவல் இருந்த மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய நபரிடம் காணப்பட்ட அறிகுறிகளை அடுத்து அவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் Clade2 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த செப். 9ஆம் தேதி உறுதியானது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | ஒரே நாடு ஒரே தேர்தல்... அமைச்சரவை ஒப்பதல் - பாஜக அரசு அதிரடி
இந்நிலையில், தற்போது கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் இருந்து உறுதியாகி உள்ளது. இதனை கேரள அரசு இன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு மருத்துவ நெறிகாட்டுதல்களின்படி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் பேஸ்புக் மூலம் தகவல் அளித்துள்ளார்.
வீணா ஜார்ஜ் தகவல்
மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான நபர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சமீபத்தில் கேரளா வந்திருந்தார் என்றும் அவர் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது என அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குரங்கம்மை தொற்று சார்ந்த அறிகுறிகள் ஏதும் யாருக்காவது தென்பட்டால் உடனே சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி அமைச்சர் அறிவுறுத்தினார்.
மத்திய அரசின் அறிவுறுத்தல்
முன்னதாக பொது சுகாதாரத் தயார்நிலை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த செப். 9ஆம் தேதி மாநில அரசுகளின் சுகாதாரத்துறைகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. குறிப்பாக மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள சுகாதார வசதிகளை மூத்த அதிகாரிகளை கொண்ட மதிப்பாய்வு செய்யவும் உத்தரவிட்டது.
அதிலும் மருத்துவமனைகளில் தோல் நோய், பாலியல் சார்ந்து பரவும் நோய் போன்ற சிகிச்சை பிரிவுகளில் பணிபுரிபவர்களிடம் குரங்கம்மை அறிகுறிகள், வேறுபட்ட நோயறிதல்கள், குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டால் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றி சுகாதாரப் பணியாளர்களுக்கு விளக்கமளிப்பது ஆகியவை குறித்தும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
நிபா வைரஸாலும் அலறும் மலப்புரம்
அதேபோல், மலப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 24 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கடந்த செப். 4ஆம் தேதி நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்த நிலையில், செப். 9ஆம் தேதி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. இவர் நிபா வைரஸால் கேரளாவில் இந்தாண்டு உயிரிழக்கும் இரண்டாவது நபர் ஆவார். கடந்த ஜூலை மாத்தில் இதே மலப்புரத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். 2018ஆம் ஆண்டில் இருந்து நிபா வைரஸ் தொற்றால் கேரளாவில் 28 பேர் பாதிக்கப்பட்டு 22 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | நிபா வைரஸால் இந்தாண்டில் 2வது பலி... பள்ளி, கல்லூரிகள் மூடல் - கட்டுபாடுகள் விதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ