உத்திரப் பிரதேச மாநில ஆக்ராவில் தைமண்டி என பகுதியில் வசித்து வந்த Vijay Bansal என்பவர் அடகு கடை வைத்துள்ளார். அவர் அந்தப் பகுதியிலுள்ள ஒரு வங்கிக்கு தன் மகளுடன் சென்று ரூ. 2 லட்சம் பணத்தை தன் கணக்கில் இருந்து எடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடுத்த பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தன் மகளிடம் கொடுத்துள்ளார். இருவரும் வங்கியில் இருந்து வெளியே வந்தபோது அங்கு திடீரென குரங்குகள் சூழ்ந்து தாக்க முயன்றுள்ளன. அப்போது அதில் ஒரு குரங்கு அவரது மகளின் கையில் இருந்த ரூ.2 லட்சத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டது.


இந்த சம்பவத்தை அடுத்தது Vijay Bansal மற்றும் வங்கி ஊழியர்கள் அந்த குரங்கை துரத்திச் சென்றுள்ளனர். அனால் அந்த குரங்கு அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் உச்சியில் பணப்பையுடன் அமர்ந்துக் கொண்டது.  கட்டிடத்தின் உச்சியில் அமர்த்திருந்த அந்த குரங்கு திடீரென ரூபாய் நோட்டுக்களை கிழித்து கிழே எறிய ஆரம்பித்தது. இவ்வாறு சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை கிழித்து கிழே வீசியது அந்த குரங்கு. அதன் பிறகு மீதிம் இருந்த ரூ.1,40,000  பணத்துடன் ஓடிய குரங்கை யாராலும் பிடிக்க முடியவில்லை.


வீசி எறியப்பட்ட ரூ. 60 ஆயிரத்தை Vijay Bansal எடுத்துக் கொண்டு மீதம் உள்ள ரூ.1,40,000 குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் எந்த பிரிவின் கீழ் குரங்கின் மீது வழக்கு தொடுப்பது எனத் தெரியாததால் கடும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் Vijay Bansal புகார் அளித்துள்ளார்.