பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு தர பிரதமர் மோடி வேண்டுகோள்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இக்கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆகஸ்ட்  10 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். 


இதில், முத்தலாக்’ உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு ஆர்வம் கொண்டு உள்ளது. மேலும் புதிதாக 18 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இந்த கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் வரிந்து கட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், கூட்டம் அமைதியாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதை தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது...! இரு அவைகளிலும் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க, அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து பேச வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை மக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, கூட்டத்தொடரை மக்களுக்கு பயனுள்ளதாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது, உயர் கல்வியில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரும் விவகாரத்தை எழுப்ப, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!