Haryana Nuh Violence: ஹரியானா மாநிலம் முழுவதும் வகுப்புவாத மோதல்களைத் தூண்டி 6 பேரின் உயிரைப் பறித்த ஜூலை 31ஆம் தேதி வன்முறையின் மையமாக இருந்த மோனு மனேசர் என்பவர் குறித்து அரசிடம் எந்த தகவலும் இல்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"அவருக்கு எதிரான வழக்கு ராஜஸ்தான் அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று கட்டார் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். "அவரைக் கண்டுபிடிக்க உதவி தேவைப்பட்டால், நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம் என்று நான் ராஜஸ்தான் அரசாங்கத்திடம் கூறியுள்ளேன். இப்போது ராஜஸ்தான் காவல்துறை அவரைத் தேடி வருகிறது. அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து எங்களிடம் எந்த தகவல்களும் இல்லை. அவர்களிடம் எதாவது தகவல் இருக்கிறதா, இல்லையா என்பதை எங்களால் எப்படி சொல்ல முடியும்?" என்றார்.


கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து, ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மோனு மானேசர் தற்போது தலைமறைவாக உள்ளார். ஆனால் அவர் ஒரு தரப்பினரை ஆத்திரமடையச் செய்யும் ஆட்சேபகரமான வீடியோவை பரப்பியதாக கூறப்படுகிறது. மோனு மானேசர், ஹரியானாவில் பஜ்ரங் தள் அமைப்பின் பசு கண்காணிப்பு பிரிவின் தலைவராக உள்ளார் எனவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ரயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற போலீஸின் பகீர் வீடியோ!


நுஹ் நகரில் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய மத ஊர்வலத்தில் அவர் காணப்பட்டதாக வெளியான வதந்திகள்  அங்கு வன்முறை வெடிக்க வழிவகுத்தன. ஊர்வலத்தின் மீது சிலர் கற்களை வீசியதால், பிரச்னை அங்கிருந்து கிளம்பியது. நள்ளிரவுக்குப் பிறகு ஒரு மசூதி எரிக்கப்பட்டது, நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. 


ஜூலை 31ஆம் தேதியான அன்று நடந்த மோதலின் வீச்சு டெல்லிக்கு அடுத்துள்ள குருகிராமில் உள்ள ஆடம்பரமான பகுதிகள் வரை எதிரொலித்தன. அவை அதிக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குருகிராம் ஆரம்பத்தில் பெரிய கூட்டங்களை தடை செய்யும் தடை உத்தரவுகளை விதித்தது. ஆனால் நேற்று, 200 பேர் கொண்ட கும்பல் வந்து, விதியை மீறி, ஒரு குடியிருப்பு சமுதாயத்திற்கு அருகில் உள்ள உணவகங்கள் மற்றும் குடிசைகளை வரிசையாக எரித்தனர்.


தீவைப்பு சம்பவங்களை தடுக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று, வலதுசாரி அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவை டெல்லி முழுவதும் கண்டன ஊர்வலங்களை நடத்தின. இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 116 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 190 பேரை பிடித்துவைத்துள்ளதாகவும் ஹரியானா முதலமைச்சர் கட்டார் கூறினார். "வன்முறைக்கு காரணமானவர்கள் இழப்புகளுக்குப் பொறுப்பேற்கப்படுவார்கள். காவல்துறை சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்பு பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகிறது," என்று அவர் கூறினார்.


எந்த மாநிலத்திலும் உள்ள மக்கள் தொகையை மேற்கோள் காட்டி, அனைவரையும் பாதுகாப்பது காவல்துறையால் சாத்தியமில்லை என்றும், அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு மக்களுக்கு முதலமைச்சர் கட்டார் வேண்டுகோள் விடுத்தார்.


மேலும் படிக்க | மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீர் கலந்த மாணவர்கள்! சமூக பிரச்சனையாக மாறிய சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ