அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை  ரத்து செய்யக் கோரி பஞ்சாப் (punjab), ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 19வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போராட்டக்காரர்கள் கடந்த 27ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை (Delhi) ஒட்டியுள்ள பிற மாநிலப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், நேற்று ஹரியானா (Haryana) மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து பண்ணை சட்டங்களை ஆதரித்துள்ளனர்.  இருப்பினும் விவசாயிகள் ஏபிஎம்சி (APMC) மற்றும் எம்எஸ்பி (MSP) முறையை தொடர வேண்டும் என்று கோரியுள்ளனர். 


இவர்களை தொடர்ந்து, இன்று புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்த உத்தரகண்ட் (uttarakhand) விவசாயிகளின் பிரதிநிதிகள் குழுவுக்கு மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நன்றி தெரிவித்தார்.


இந்த நிலையில், இந்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை (Narendra Singh Tomar), தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேட்டவலம் மணிகண்டன் மற்றும் தெலங்கானா, மகாராஷ்டிரா, பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்களைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை அவர்கள் அளித்துள்ளதாக அமைச்சர் தோமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



விவசாயிகளுடன் மேற்கொள்ள உள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதியை முடிவுசெய்ய விவசாயிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.


முன்னதாக, இன்று வேளாண் துறை அமைச்சர் தோமர் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து விவசாயிகள் போராட்டத்தை எப்படி முடிவுக்கு வருவது என்பது குறித்து ஆலோசனை செய்தார்.


இதற்கிடையே, சட்டக்கல்லூரி மாணவர் ரிஷப் சர்மா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் போக்குவரத்து பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. நெடுஞ்சாலைகளில் போராட்டங்களை நடத்தி வரும் போராட்டக்க்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும்," என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு இதனை விசாரிக்கும். 


ALSO READ | ஹரியானாவை தொடர்ந்து உத்திராகண்ட் விவசாயிகளும் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR