J&K சோப்போரில் கையெறி குண்டு தாக்குதலில் 15 பேர் படுகாயம்..!
ஜம்மு-காஷ்மீரின் சோப்போரில் கையெறி குண்டு தாக்குதலில் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்..!
ஜம்மு-காஷ்மீரின் சோப்போரில் கையெறி குண்டு தாக்குதலில் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்..!
திங்கள்கிழமையாண்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்போரில் ஒரு பஸ் ஸ்டாண்ட் அருகே பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை 4:15 மணிக்கு ஹோட்டல் பிளாசா அருகே கையெறி குண்டு வெடித்தது. மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் நிலையான நிலையில் இருப்பதாகவும் அறியப்படுகிறது. CRBF-ன் 179 பட்டாலியனின் துருப்புக்கள் அந்த இடத்தை அடைந்து அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளன.
தாக்குதல் நடத்தியவர்களை தேடும் தீவிர பணியில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.