கரன்சி விவகாரம்: மத்திய அரசுக்கு 93% பேர் ஆதரவு
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி பொதுமக்களிடம் நீங்கள் இந்த மாற்றத்துக்கு ஆதரிக்கிறீர்களா என்று நேரடியாக பதில் கேட்டுக்கொண்டிருந்தார்.
புதுடெல்லி: ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி பொதுமக்களிடம் நீங்கள் இந்த மாற்றத்துக்கு ஆதரிக்கிறீர்களா என்று நேரடியாக பதில் கேட்டுக்கொண்டிருந்தார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் விதமாக பிரதமர் மோடி ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றார். டிசம்பர் 31 வரையில் கால அவகாசம் வழங்கினார். இந்த அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் மக்கள் வங்கிகளில் அலை மோதினர். நீண்ட வரிசையில் நின்று தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கின்றனர்.
பிரதமர் மோடி நேரடியாக மக்களையை தொடர்பு கொள்ள முன்வந்து தனது டிவிட்டார் பக்கத்தில் கேள்வி கேட்டார். மத்திய அரசின் நடவடிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்வியுடன் மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார்..
இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை என்எம் ஆப் என்ற செயலியில் 10 கேள்விகளுக்கு பதிலை பதிவு செய்யுமாறு நேற்று முன்தினம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ரூபாய் நோட்டுக்கு தடை விதித்த மோடியின் செயலுக்கு, ஆப்பில் கருத்து தெரிவித்தவர்களில் 93 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தகவல் தொடர்பு மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதில், கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்த 24 மணி நேரத்தில் இந்த கருத்துக்கணிப்பில் 5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 93 சதவீதம் பேர் ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதில் 73 சதவீதம் பேர் இந்த நடவடிக்கை மிக சிறப்பானது என பதிவிட்டுள்ளனர்.
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டு செல்லாது என்பது தொடர்பான அறிவிப்பு தொடர்பாக சில கேள்விகள் அதில் கேட்கப்பட்டுள்ளது:-
* இந்தியாவில் கருப்பு பணம் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
* ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற வேண்டுமா? வேண்டாமா?
* 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை என்ற மோடி அரசின் நடவடிக்கை குறித்து உங்களுடைய கருத்து?
* மோடியிடம் பகிர்ந்துக் கொள்ள உங்களிடம் ஏதாவது கருத்துக்கள், ஐடியாக்கள் மற்றும் உள்ளார்ந்த பார்வை உள்ளதா?
* இச்செயலின் மூலம் ஊழல், கருப்பு பணம், பயங்கரவாதம், கள்ள நோட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் மனதளவில் உங்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டதா?
என்ற கேள்விகளை பிரதமர் மோடி கேட்டார்.
இந்த கருத்துக்கணிப்பில் 93 சதவீதம் பேர் ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.