அடுத்த 2-3 நாட்களில் மீண்டும் மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் மிதமான முதல் அதிக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்த மழைக்கான காரணம் தெற்கு குஜராத் கடற்கரையில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாகியுள்ளது தான் காரணம். மேலும், ஒடிசா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு சூறாவளி சுழற்சி உள்ளது.


IMD படி, அடுத்த 2-3 நாட்களில் இப்பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது, ஏனெனில் மேற்கு கடற்கரை தெற்கு கொங்கனை நோக்கி நகர்கிறது. தவிர, அவுரங்காபாத், அகோலா, அகமதுநகர், நாக்பூர் மற்றும் கடற்கரையோரங்களில் கடுமையாக மழை பெய்துள்ளது. 



மேலும், கேரளாவில் உள்ள 10 மாவட்டங்களுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, எர்ணாகுளம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.


இந்த 10 மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது. இதேப் போல நாளை ஆலப்புழா, இடுக்கி, கண்ணூர், காசர் கோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது.