டவ் தே புயலில் ஆறு நாட்களுக்கு முன்பு மும்பை கடற்கரையில் மூழ்கிய Barge P305 சனிக்கிழமை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. சரக்கு கப்பலில் இருந்து காணாமல் போனவர்களை, தேடும் பணி இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டது. தேடுதல் பணி இரவு நேரத்திலும் தொடர்ந்தது. ஒளி விளக்குகள் மற்றும் சில கருவிகளை பயன்படுத்தி, இரவு பகலாக தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டவ்-தே சூறாவளியின் போது அரேபிய கடலில் மும்பை கடற்கரை பகுதியில் ONGC நிறுவனத்தின் பார்க் பி 305 என்ற சிறு ரக கப்பல் மூழ்கிய நிலையில்,  இதுவரை 61 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.


"Barge P305  சம்பவம்: மொத்தம் 61 உடல்கள் மும்பை போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன. ஜே.ஜே. மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறந்தவர்களின் உறவினர்களிடம் குறைந்தது 41 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன" என்று மும்பை (Mumbai) போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


குஜராத்தின் (Gujarat) வல்சாத் மாவட்டத்தில் கரையோரத்தில் நான்கு சடலங்கள் சனிக்கிழமையன்று கண்டெடுக்கப்பட்டன, உள்ளூர் போலீஸார் அவர்கள் பி -305 பார்க் காணாமல் போனவர்களில் சிலர் இருக்கலாம் என்று சந்தேகித்தனர். கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பி -305 மூழ்கிய சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது, இன்று மேலும் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, ஒன்பது பேரை இன்னும் காணவில்லை. சிறு ரக கப்பலில், பணியில் இருந்த 261 பணியாளர்களில் 186 பேர் மீட்கப்பட்டனர்.


ALSO READ: Cyclone Tauktae: புயலின் ஆவேசம், மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவின் பரபர வீடியோ!



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR