அரபிக்கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறிய டவ் தே இன்று அதிகாலை குஜராத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள கடலோர மாவட்டங்கள், மும்பை ஆகிய பகுதிகள் பெரிய அளவில் சேதங்களை சந்தித்துள்ளன.
இதனால் மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் கனமழை பெய்தது. ஜூஹா கடற்கரை கொந்தளிப்புடன் காணப்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த காட்சிகளை யாரோ ஒருவர் தாஜ் ஹோட்டலில் இருந்து படம் பிடித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
Maaaan .....nature's fury has no parallel !
Never ever seen Gateway of India like this in all these years #CycloneTauktae pic.twitter.com/xOg52kBo0i
— Sameer (@BesuraTaansane) May 17, 2021
கடலில் இருந்து வெளியேறும் நீர் அதன் சுவர்களைக் கடக்கிறது என்பது வீடியோவில் காணப்படுகிறது. இந்த நேரத்தில் பெரும் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது, குறைந்தது ஆறு பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த டவ் தே புயல் (Cyclone Tauktae) காரணமாக மும்பை கடலில் நிறுத்தப்பட்டு இருந்த பார்ஜ் வகை ஓஎன்ஜிசி கப்பல் கடலில் அடித்து செல்லப்பட்டது. 150+ கிமீ வேகத்தில் வீசிய புயல் காற்று காரணமாக இந்த கப்பல் நேற்று கடலில் அடித்து செல்லப்பட்டு, பின் நீரில் மூழ்கியது.
புயல் காரணமாக இதன் நங்கூரம் நீங்கிய நிலையில், கடலில் கட்டுப்பாடு இல்லாமல் இந்த பார்ஜ் 305 கப்பல் மிதந்து சென்று இருக்கிறது. பாம்பே ஹை கடல் பகுதியில் இருந்து 175 கிமீ தூரம் சென்ற பின் இந்த கப்பல் நீரில் மூழ்கியது. இந்த கப்பலில் மொத்தம் 273 பேர் இருந்துள்ளனர். இதில் 145 பேர் இதில் மீட்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள 127 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR