மும்பை: அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த டவ்-தே புயல், அதிதீவிர புயலாக மாறி இந்தியாவின் மேற்கு கடற்கரையோரத்தில் கரையைக் கடந்து கொண்டிருக்கின்றது. மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பையில் அதி கனமழை பெய்த நிலையில், காற்றின் வேகமும் அதி தீவிரமாக உள்ளது. மும்பையை மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த புயல் கடந்த போது அதிகளவு மழை பொழிந்தது. மும்பையில் பல இடங்களில் மழை கோர தாண்டவம் ஆடி நகரை துவம்சம் செய்துள்ளது.
முன்னதாக, கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அரேபிய கடலில் நிலைக்கொண்டிருத காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே அதி தீவிர புயலாக (Cyclone) வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதி தீவிர புயலாக உருவெடுத்த டவ்-தே புயல், இன்று முன்னிரவில் குஜராத் அருகே கரையைக் கடக்கத் துவங்கியது.
அரேபிய கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான இந்த புயல், பின்னர் வலுப் பெற்று கர்நாடகா, கோவா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக குஜராத் கடற்கரையில் இன்னும் வலுப்பெற்று நிலை கொண்டது.
#WATCH | Earlier visuals from Veraval - Somnath in Gujarat as the sea turned rough in wake of #CycloneTauktae.
Extremely severe cyclonic storm Tauktae lies close to the Gujarat coast. The landfall process has started and will continue during next 2 hours, says IMD. pic.twitter.com/7KojZcXS27
— ANI (@ANI) May 17, 2021
ALSO READ: டவ்-தே புயல்: 5600 படகுகள் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை; கடலோர காவல்படை தகவல்
டவ்-தே புயல் (Cyclone Tauktae) காரணமாக, குஜராத், மகாராஷ்டிரா மாநிங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையின் ஜுஹு கடற்கரையில் கடும் அலை சீற்றம் காணப்பட்டது. அதிவேக காற்றுடன் மழையும் சேர்ந்துகொண்டதால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
முன்னதாக, டவ்-தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
மும்பையை புரட்டிப்போட்ட புயலின் சீற்றத்தை சில இணையவாசிகள் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:
தமிழகத்திலும் தாக்கம்:
டவ்-தே புயலின் தாக்கத்தால், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம், கேரளா உட்பட ஐந்து மாநிலங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமையன்று எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்தில் (Tamil Nadu) கன்னியாகுமரி உள்ளிட்ட சில கரையோர மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் சூறாவளிக் காற்று வீசியதில், பல வீடுகள் சேதமடைந்தன. பல ஊர்களுக்குள் கடல் நீர் புகுந்தது. டவ் தே புயல் குறித்து தமிழக முதல்வர் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் சனிக்கிழமையன்று ஆலோசனை நடத்தினார். நிலச்சரிவு போன்ற இயற்கை பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ALSO READ: அதி தீவிர புயலாகிறது டவ் தே, 5 நாட்களுக்கு கன மழை: எச்சரிக்கும் IMD
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR