இன்றும் மும்பையில் கனமழை! தத்தளிக்கும் மும்பைவாசிகள்!!
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து பெய்யும் கன மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து பெய்யும் கன மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் தொடரும் கனமழை காரணமாக புறநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பலத்த மழை பெய்து வருவதால் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை நகரின் தாழ்வான பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மும்பையில் கனமழை வெளுத்து வாங்கி வரும். நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. நேற்றும் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக நகரமே வெள்ளகாடாக காட்சி அளித்தது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
பாதசாரிகளும் வெள்ளத்தால் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். ரயில்வே தண்டவாளங்களையும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் ரயில் சேவையில் பாதிப்பு உணரப்பட்டது. கனமழை காரணமாக ரயில்கள் வழக்கம் போல் இயங்கினாலும் தாமதமாக இயங்குகிறது.
இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலின் படி Colaba-வில் 171 mm அளவு மழை பெய்துள்ளது. மேலும் மும்பை Santa Cruz-ல் 122 millimetre மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில், பெய்து வரும் கன மழையானது மேலும் கூடுதலாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.