₹ 5 முதல் ₹ 20 வரை பேருந்து கட்டணம் குறைப்பு.. ஜூலை முதல் அமல்!
மும்பையின் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பரிந்துரையை மகாராஷ்ட்ரா அரசின் போக்குவரத்துத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது.
மும்பையின் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பரிந்துரையை மகாராஷ்ட்ரா அரசின் போக்குவரத்துத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது.
பெஸ்ட் என்ற பெயரில் அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கப்படுகிறது. பேருந்துகள் நீண்ட தூரம் செல்லும் போதும், மும்பை நகர மக்களின் ஆபத்பாந்தவனாக உள்ள மின்சார ரயில்களை ஒப்பிட்டால் பலமடங்கு கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
பேருந்துகளின் கட்டணம் அதிகமாக இருப்பதால்தான் மும்பையின் மின்சார புறநகர் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பேருந்து கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன, சாதாரண பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அதிகபட்ச கட்டணமும், 62 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. ஏசி வசதி செய்யப்பட்ட பேருந்துகளில் குறைந்தபட்சம் 6 ரூபாயாகவும் அதிகபட்சம் 25 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கட்டணத்தின் திருத்தப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:-
5 கி.மீ வரை கட்டணம் - ரூ .5
10 கி.மீ வரை கட்டணம் - ரூ .10
15 கி.மீ வரை கட்டணம் - ரூ .15
15 கி.மீ க்கு மேல் - ரூ .20
தினசரி பாஸ் - ரூ .50
இதே போன்று மாதாந்திர அட்டைகளும் விலை குறைக்கப்பட்டுள்ளன. ஜூலை மாதம் முதல் இது அமலுக்கு வர உள்ளது.