உத்தரப்பிரதேச ராமர் கோவில் கட்ட தமிழ்நாட்டில் பக்தர்கள் தன்னார்வத்துடன் தாராளமாக் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஒரு முஸ்லிம் வர்த்தகர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ .1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத நல்லிணத்தை நோக்கமாக கொண்ட ஒரு சைகையை, அனைவரும் பாராட்டி வருகின்றனர். ராமர் கோவில் (Ram Temple) கட்டுமான பணிக்கு,  முக்கிய பிரமுகர்கள் பலர் தங்கள் பங்களிப்புகளை வழங்கி வரும் நிலையில், சிறு வணிகர்கள், தினசரி கூலி பெற்று வாழ்க்கையை ஓட்டுபவர்களும் நன்கொடை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 சமீபத்தில், ஓய்வூதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஏழை பெண்மணி ஒருவர், தனது ₹500 நன்கொடையாக கொடுத்தது. அனைவர் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது. 


அயோத்தியில் (Ayodhya) கோயில் கட்டுவதற்காக மையம் அமைத்த ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை (SRJTK), ரூ .10, 100 மற்றும் 1,000 நன்கொடை கூப்பன்களை வெளியிட்டனர். இதில், ஏராளமான மக்கள் நன்கொடை அளிக்க முன்வந்ததாக, கோயிலுக்கு நிதி திரட்டுவதில் ஈடுபட்டுள்ள வி.எச்.பி மாநில செயலாளர் எஸ்.வி.சீனிவாசன் தெரிவித்தார்.  

"நாங்கள் அணுகிய அனைவருமே உன்னதமான காரணத்திற்காக நன்கொடை அளிப்பதில் தாராள மனப்பான்மை காட்டினார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.


தன்னார்வலர்களுடன் இந்து முன்னானியின் உறுப்பினர்கள்  வர்த்தகரான ஹபீப் என்பவரை அணுகியபோது, அவர் நன்கொடையாக,  ரூ .1,00,008 க்கு ஒரு காசோலையை அளித்தார், நிதி திரட்ட சென்றவர்களை இதன் மூலம் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.


"நான் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் நட்புறவை வளர்க்க விரும்புகிறேன். நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள். இந்த நம்பிக்கையுடன் இந்த தொகையை நான் நன்கொடையாக அளித்தேன்" என்று ஹபீப் கூறினார்.


ALSO READ | ராமருக்கு உதவிய அணிலை போல் ராமர் கோவில் கட்ட அனைவரும் பங்களிக்கவும்: அக்‌ஷய் குமார்


ஒரு நல்ல காரணத்திற்காக நன்கொடை அளிப்பதில் தவறில்லை என்று சுட்டிக்காட்டிய ஹபீப், "நான் வேறு எந்த கோவிலுக்கும் நன்கொடை அளித்திருக்க மாட்டேன், ஆனால் பல தசாப்தங்களாக அயோத்தி சர்ச்சை முடிவுக்கு வந்ததால் ராம் கோயில் கட்டுமானம் என்பது தனித்துவமானது" என்று குறிப்பிட்டார்.


2019 நவம்பரில் உச்சநீதிமன்றம் பல தசாப்தங்களாக நிலவி வந்த சர்ச்சையை தீர்த்து, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராம் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது


உ.பி.யில் அயோத்தியில், புதிய மசூதியைக் கட்டுவதற்காக, சுன்னி வக்ஃப் வாரியத்திற்கு  5 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.


பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ஒரு பிரமாண்டமான கோயில் கட்டுவதற்கு, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.


ALSO READ | ராமர் கோவிலுக்கான, பிரம்மாண்டமான மணி ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியை அடைந்தது..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR