ராமர் கோவிலுக்கான, பிரம்மாண்டமான மணி ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியை அடைந்தது..!!!

ராமர் கோவிலுக்காக, 4 அடி உயரமான 613 கிலோ எடையுள்ள கோவில் மணி ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி வந்தடைந்தது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 8, 2020, 05:11 PM IST
  • ராமர் கோவிலுக்காக, 4 அடி உயரமான 613 கிலோ எடையுள்ள கோவில் மணி ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி வந்தடைந்தது.
  • செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட ராம் ரத யாத்திரை, இந்த மணியை சுமந்து கொண்டு புதன்கிழமை அயோத்தியை அடைந்தது.
  • அதில் “ஜெய் ஸ்ரீ ராம்” என பொறிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவிலுக்கான, பிரம்மாண்டமான மணி ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியை அடைந்தது..!!!

ராமர் கோவிலுக்காக, 4 அடி உயரமான 613 கிலோ எடையுள்ள கோவில் மணி ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி வந்தடைந்தது.

613 கிலோ மணி ஒலிக்கும் போது, ராமர் கோவில் நகரமான அயோத்தியில், கோவிலை சுற்றி 10 கி.மீ. சுற்றளவில் கோவில் மணி ஒலி கேட்கும்.

செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட ராம் ரத யாத்திரை, இந்த மணியை சுமந்து கொண்டு புதன்கிழமை அயோத்தியை அடைந்தது, 613 கிலோ எடையுள்ள இந்த பிரம்மாண்டமான மணி, ராம் கோயிலில் நிறுவப்படும்.

இந்த பயணத்தை சென்னையைச் சேர்ந்த ‘சட்ட உரிமைகள் பேரவை’ என்னும் அமைப்பு இந்த யாத்திரையை ஏற்பாடு செய்தது. ‘பிரமாண்டமான மணி’ 4.1 அடி உயரம் கொண்டது. அதில் “ஜெய் ஸ்ரீ ராம்” என பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அட.... ஒரு நாள் CM மாதிரி, ஒரு நாள் PM.. எந்த நாட்டில தெரியுமா..!!!

613 கிலோ மணி ஒலிக்கும் போது, ​​கோயில் நகரத்தின் 10 கி.மீ சுற்றளவில் ஒலி கேட்கப்படும். மேலும், மணியின் ஒலியான ‘ஓம்’ எதிரொலிக்கும், 10 மாநிலங்கள் வழியாக 4,500 கி.மீ தூரம் பயணம் செய்து, ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை ராம் ரத்தை ஓட்டிச் சென்ற ராஜ் லக்ஷ்மி மாதா இவ்வாறு கூறினார்.

ராமர் ரதத்தில், ராமர், அவரது மனைவி சீதா, சகோதரர் லக்ஷ்மணன், விநாயகர் மற்றும் அனுமன், ஆகிய கடவுளர்களின் வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலைகளையும் அவர் எடுத்துச் சென்றார்.

9.5 டன் எடையை இழுத்து உலக சாதனை படைத்த ராஜ் லக்ஷ்மி, புல்லட் ராணி என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

ராம் மந்திர் அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா, மஹந்த் தினேந்திர தாஸ் மற்றும் விம்லேந்திர மிஸ்ரா ஆகியோரின் முன்னிலையில் ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராயிடம் புதன்கிழமை பிரம்மாண்டமான மணி மற்றும் சிலைகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க | இந்தியா நோக்கி வரும் சர்வதேச மொபைல் நிறுவனங்கள்... Global Hub ஆக மாறி வரும் இந்தியா..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

More Stories

Trending News