உ.பி., மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவத்தை ஓவியமாக வரைந்த முஸ்லிம் பெண்ணை அவரது கணவர் உட்பட 6 பேர் தாக்கி உள்ள சம்பவம் அதிரிச்சியில் உள்ளக்கி உள்ளதுனர். அந்த பெண்ணை தாக்கியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உ.பி., மாநிலம் பாலியா மாவட்டம் சிக்கந்தர்பூரை அடுத்துள்ள பசாரிக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பர்வேஸ் கான். கடந்த ஆண்டு இவருக்கும் நக்மா பிரவீன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. நக்மாவுக்கு ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் உள்ளது.


இவர் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவத்தை நக்மா ஓவியமாக வரைந்துள்ளார். அதை பார்த்த அவரது கணவர் கோபம் அடைந்து நக்மாவை அடித்து உதைத்தான். 


இதையடுத்து, தாய் வீட்டுக்குச் சென்ற நக்மா, தனது தந்தை ஷம்ஷர் கானிடம் கணவர் வீட்டில் நடந்ததை கூறி முறையிட்டுள்ளார்.


இதையடுத்து, மருமகன் பர்வேஸ் உட்பட 6 பேர் மீது சிக்கந்தர்பூர் காவல் நிலையத்தில் நக்மாவின் தந்தை ஷம்ஷர் கான் புகார் செய்துள்ளார். 


இதன் அடிப்படையில் அந்த 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் நேற்று தெரிவித்தார்.