புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்கள் பிடித்துப் பெரும்பான்மை பெற்றது. இதைத்தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபேரவை உறுப்பினர்கள், அக்கட்சியின் தலைவர் ரங்கசாமியை ஒருமனதாகத் தேர்வு செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 கடந்த 3-ம் தேதி மாலை ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள், புதுச்சேரி துணை நிலை ஆளுநரான, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்தனர். அப்போது, ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி  என்.ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் 16 பேரின் ஆதரவுடன் கூடிய கடிதத்தை வழங்கினர்.


இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த யூனியன் பிரதேச செயலாளர் ஜெயபால், ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் முதல்வராக என்.ரங்கசாமி 7-ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்குப் பதவியேற்க உள்ளார்’’ என்று தெரிவித்தார்.


கொரோனா பரவலைக் (Corona Virus) கருத்தில் கொண்டு எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


ரங்கசாமி மட்டும் நாளை பதவி ஏற்பார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜகவைச் சேர்ந்தவர்கள் உட்பட பிற அமைச்சர்கள் அடுத்த சில நாட்களில் பதவி ஏற்பார்கள் என கூறப்படுகிறது.


ALSO READ | தமிழக முதலமைச்சராக நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்


வழக்கமாக, புதுச்சேரி அமைச்சரவையில் முதல்வர் உட்பட ஆறு அமைச்சர்கள் இருப்பார்கள். இது வரை துணை முதல்வர் என யாரும் இருந்ததில்லை என்றாலும், காங்கிரஸில் இருந்து விலகிய பின்னர் ஜனவரி மாதம் பாஜகவில் சேர்ந்த  நமசிவயம் துணை முதல்வர் பதவிக்கு  தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஏப்ரல் 6 தேர்தலில் போட்டியிட்ட 16 இடங்களில் 10 இடங்களை ஏ.ஐ.என்.ஆர்.சி  வெற்றி பெற்றது. பாஜக போட்டியிட்ட ஒன்பது இடங்களில் ஆறு இடங்களில் வென்றது. 


காங்கிரஸ் போட்டியிட்ட 14 இடங்களில் இரண்டு இடங்களை மட்டுமே வென்றுள்ளது. திமுக போட்டியிட்ட 13 இடங்களில் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.


ALSO READ | உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்-தமிழக அமைச்சகங்களின் பெயர் மாற்றம்: மு.க.ஸ்டாலின்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR