பல்வேறு மாநிலங்களில் நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65634.93 கோடி கடன் வழங்க NABARD வங்கி ஒப்புதல் அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதான மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் 93 முன்னுரிமை நீர்ப்பாசன திட்டங்களுக்கு இதுவரை ரூ. 65,634.93 கோடி கடன் வழங்க வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) ஒப்புதல் அளித்துள்ளது என அதன் தலைவர் எச்.கே. பன்வாலா தெரவித்துள்ளார்!


நீண்ட கால நீர்ப்பாசன நிதி மூலம் PMKSY கீழ் 99 முன்னுரிமை நீர்ப்பாசன திட்டங்கள் மத்திய மற்றும் மாநில பங்கு நிதி திட்டங்களுக்கு ரூ. 70,000 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் வரும் 2019-க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த அறிவிப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான திட்டங்களுக்கு நபார்டு வங்கி கடனுதவி அளிக்கிறது. மகாராஷ்டிரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் நபார்டு வங்கி கடனுதவி அளிக்க உள்ளது


முன்னதாக 86 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.23,402.72 கோடி நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள. இதில் மத்திய அரசு பங்களிப்பு 15,242.02 கோடி, மாநில அரசின் பங்கு 8,160.70 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 18 திட்டங்கள் முடிவடைந்துவிட்டன, மேலும் ஏழு திட்டங்கள் முடிவடைவதற்கு அருகில் உள்ளன எனவும் பன்வாலா குறிப்பிட்டுள்ளார்.


"மாநில அரசாங்கங்கள் மூலம் நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் மத்திய அரசின் பங்கு பல திட்டங்களுக்கு கிடைக்கிறது, ஆனால் மாநில அரசின் பங்கு பெற நேரம் அதிகம் எடுக்கிறது," எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.