மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஏராளமான பாம்புகள் காணப்படுகின்றன. இந்த கிராமம் கண்ட்வா நகருக்கு அருகில் உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பாம்புகள் இருப்பதால், இந்த கிராமத்திற்கு நாக்சுன் என்ற பெயரும் கிடைத்தது. நாக்சுன் (Nagchun) கிராமத்தில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த கிராமத்தின் வயல்வெளிகளிலும் தெருக்களிலும் மட்டுமல்லாமல், வீடுகளின் படுக்கையறைகள், சமையலறைகள் மற்றும் துணி ஹேங்கர்களிலும் விஷ பாம்புகள் (Poisonous Snakes) தொங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். இருப்பினும், முன்பை விட வயல்களில் ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், இப்போது பாம்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பாம்புகள் அங்குள்ள குடும்போங்களின் குடும்ப உறுப்பினர்களைப் போல இருக்கின்றன. நாக்சுனில் பண்டித் சௌரவ் சௌரே என்பவர் தனது குடும்பத்தினருடன் 16 ஏக்கர் பண்ணையில் வசித்து வருகிறார். சௌரவின் பண்ணையிலும் கிராமத்திலும் ஆயிரக்கணக்கான விஷ பாம்புகள் உள்ளன. இந்த பாம்புகள் வீடுகளுக்குள் வந்து சமையலறை, படுக்கையறை, குளியலறை மற்றும் முற்றத்தில் அமர்ந்திருக்கும். அவரது குடும்பத்தினர் 5-6 தலைமுறைகளாக இந்த இடத்தில் வசித்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. எந்தவொரு புனிதமான நிகழ்வுகளும் திருமணங்களும் நாக தேவதை கோவிலில் வழிபாட்டுடன்தான் தொடங்குகிறது என்று 80 வயதான பைலால் யாதவ் கூறுகிறார். நாக்சுன் கிராமத்தில், நாகபஞ்சமியன்று மட்டுமல்லாமல், ஒவ்வொரு பஞ்சமியிலும் நாக தேவதைக்கு பூஜை செய்யப்படுகிறது.


விலங்கு அறிவியல் நிபுணர் ராஜேஷ் சிங்கின் கருத்துப்படி, நாக்சுன் கிராமத்தின் புவியியல் இருப்பிடம் பாம்புகளுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கிறது. இங்கு மூங்கில் மரங்களைத் தவிர, குளங்கள், கால்வாய்கள், நீரோடைகள் மற்றும் பாறைப் பகுதிகள் உள்ளன. அவை இயற்கையாகவே பாம்புகள் வாழ ஏதுவான இடங்களாக கருதப்படுகின்றன. ஏனெனில் இதுபோன்ற இடங்களில் பாம்புகள் உணவு, பாதுகாப்பு ஆகியவற்றை எளிதில் பெறுகின்றன.


நாக்சுன் கிராமத்திற்கும் விஷ பாம்புகளுடன் மிகவும் பழமையான தொடர்பு உள்ளது. தங்கள் குடும்பம் இந்த கிராமத்தில் 250 ஆண்டுகளாக வசித்து வருவதாக பையாலால் யாதவ் என்பவர் கூறினார். 1894 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் இந்த கிராமத்தில் 5200 ஏக்கர் நிலத்தில் ஒரு குளத்தை கட்டினர். இது காண்ட்வா நகரத்தின் நீருக்கான தேவையை பூர்த்தி செய்தது. இந்த கிராமத்தில் வாழும் பாம்புகள் மக்களுக்கு எந்தத் தீங்கும் செய்வதில்லை. கிராம மக்களும் பாம்புகளை இங்கு அடிப்பதில்லை.


ALSO READ: `நாக பஞ்சமி!’ - ஆடி மாதம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்


இந்தியாவின் மிக அதிக அளவு விஷம் கொண்ட பாம்புகளாகக் கருதப்படும் இந்தியன் கோப்ரா, இந்தியன் க்ரேட், ரசேல் வைபர், அல்பினோ கோப்ரா, பஞ்சா பாம்பு ஆகிய பாம்புகளுடன் 30 அடி நீளமுள்ள மலைப்பாம்புகளும் இங்கு காணப்படுகின்றன. இந்த கிராமத்தில் மொத்த மக்கள் தொகை சுமார் ஓராயிரமாகும். விஷ பாம்புகளுக்கு மத்தியில் வாவும் போதும், இதுவரை ஒருவர் கூட பாம்பு கடிக்காக மருத்துவரை அணுகியதில்லை. பாம்புகள் இவர்களை கடிப்பதில்லை. இவர்களும் பாம்புகளை அடிப்பதோ கொல்வதோ கிடையாது. ஆம்! குடும்ப நபர்களை துன்புறுத்துவது நம் வழக்கமல்லவே!!