நாக்பூர்: தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாளால் கேக்குகளை வெட்டியதாக நாக்பூரில் (Nagpur) 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேக்குகளை வெட்டுவதற்கு அந்த நபர் வாளைப் பயன்படுத்திய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகியதை அடுத்து நாக்பூர் காவல்துறையின் குற்றப்பிரிவு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.


“குற்றம் சாட்டப்பட்ட நிகில் படேல் அக்டோபர் 21 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்று அதிகாலையில், அவரும் அவரது நண்பர்களும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நான்கு பெரிய கேக்குகளை வாங்கி வந்தனர். படேல் பின்னர் ஒரு வாளை எடுத்து தனது நண்பர்கள் முன்னிலையில் அனைத்து கேக்குகளையும் வெட்டினார்” என்று பர்டி காவல் நிலைய அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.



ALSO READ: Ireland-லிருந்து வந்த alert, சென்னையில் பிடிபட்ட திருடன்: Hero-வான Technology!!


“இந்தச் செயலின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வைரலாகின. அதைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு, படேலின் வீட்டில் சோதனை நடத்தி வாளைக் கைப்பற்றி அவரைக் கைது செய்தது” என்று அவர் மேலும் கூறினார்.


ஆயுதச் சட்டம் மற்றும் மும்பை போலீஸ் (Mumbai Police) சட்டத்துடன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு ஜூலை மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், 25 வயதான ஒருவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக சுமார் 30 பேரை மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனது கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்தார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், விருந்தினர்களால் சூழப்பட்ட நிகழ்வில், ஹரிஸ் கான் 25 கேக்குகளை வாளால் வெட்டியதையும் அவர்களில் யாரும் முகக்கவசம் கூட அணியாமல் இருந்ததையும் காண முடிந்தது. 


ALSO READ: தொற்றின் தூதன் என தெரியாமல் mask-ஐ எடுத்துச் செல்லும் அப்பாவி பறவையின் Viral Photo!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR