புதுடில்லி: தமிழகத்தில் மோடியின் அலை ஓயவில்லை என சமீபத்திய ஆய்வு ஒன்று தனது அறியிக்கையினை வெளியிட்டது. இந்த ஆய்வின் முடிவினை தமிழக மக்கள் அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் பிரதமர் மோடி புதியதொரு திட்டம் ("1 பில்லியன் - 1 பில்லியன் - 1 பில்லியன்") செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


அதன்படி, ஒரு பில்லியன் வங்கிக் கணக்குகளை ஒரு பில்லியன் ஆதார் எண்கள் மற்றும் ஒரு பில்லியன் மொபிலைஸ் ஆகியவற்றை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின்படி, இந்த இலக்கினை அடைய உடனடி காலக்கெடு எதுவும் எடுக்கப்படவில்லை.


இந்த சீர்திருத்த திட்டம், நாட்டில் வணிக சூழலை மேம்படுத்தும் எனவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கும் எனவும், மதிப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது.


இருப்பினும் இத்தகு திட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்குமா? என்பதினை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்!


Read this story in ENGLISH