பிரதமர் மோடி அவர்களே, உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது. இது மாற்றத்திற்கான நேரம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேரத்லின் ஐந்து கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும்  2 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மீதமுள்ள இரண்டு கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.


இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று, பிரதமர் மோடி அவர்களே உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது. இது மாற்றத்திற்கான நேரம் என தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., 



"ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டம் (நியாய்) தொடர்பான விழிப்புணர்வு நாடு முழுவதும் பரவியுள்ளது. இதனால் கடந்த 5 கட்டமாக நடைபெற்ற தேர்தல்களில் முதியோர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் வாக்களித்து உள்ளனர். எனவே, பிரதமர் மோடி அவர்களே, உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது. இது மாற்றத்திற்கான நேரம்" என பதிவிட்டுள்ளார்.


பிரதமர் மோடியை திருடன் என கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ள ராகுல் காந்தி, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்தார்.


இதற்கிடையில் ஹரியாணா மாநிலம் குருகெஷ்ட்ரா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி உண்மை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என கடுமையாக சாடியுள்ளார்.