புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது மாதாந்திர நிகழ்ச்சியான "மான் கி பாத்" (Mann Ki Baat) மூலம் மீண்டும் நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார். இது பிரதமர் மோடியின் நிகழ்ச்சியின் 60 வது அத்தியாயம் ஆகும். வானொலியில் (Radio) ஒளிபரப்பப்பட உள்ளது. இதன் மூலம், இது 2019 ஆம் ஆண்டின் கடைசி அத்தியாயமாகவும் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, கடந்த மாதம் நவம்பர் 24 (ஞாயிற்றுக்கிழமை) ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான "மான் கி பாத்"தில் "ஃபிட் இந்தியா இயக்கம் முதல் 'பிளாஸ்டிக் இலவச இந்தியா வரையிலான பல்வேறு விஷயங்களையும், அயோத்தி கோயில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பையும் குறிப்பிட்டு பேசினார்.


கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைத்து பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாடுவதற்காக "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 03 ஆம் தேதி (விஜயதசமி) தனது முதல் உரையை பிரதமர் தொடங்கினார்.


இந்நிலையில், இன்று பிற்பகல் 11 மணிக்கு "மன் கி பாத்" நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.