வாஜ்பாயி உருவம் பொறிக்கப்பட்ட ₹100 நாணயம் வெளியீடு!
மறைந்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் நினைவாக, அவரது உருவம் பதித்த ₹100 நாணயத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார்!
மறைந்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் நினைவாக, அவரது உருவம் பதித்த ₹100 நாணயத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார்!
அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் பிறந்த தினம் நாளை கொண்டாப்படவுள்ள நிலையில், அவரது நினைவு நாணயத்தினை இன்று பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார்.
முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் உடல்நல குறைவால் கடந்த ஜூன் 11-ஆம் நாள் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 9 வாரங்களாக மருத்துவ கண்கானிப்புக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் 16, 2018-ஆம் நாள் இயற்கை ஏய்தினார்.
நாட்டின் 11-வது பிரதமாரான அட்டல் பிஹாரி வாஜ்பாயி(93) அவர்கள் 1924-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் என்ற ஊரில் நடுத்தர் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
திருமண வாழ்வில் நாட்டம் காட்டாத இவர் 50 வருட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-ஆம் ஆண்டு சிறுது காலமும், 1998-ஆம் ஆண்டில் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இரண்டாவது முறை பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நாட்டின் முன்னேற்றப் பாதை பல வழிகளில் சென்றது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றங்கள் பல கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாணயத்தின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
நாணயத்தின் ஒரு பக்கம் வாஜ்பாயியின் உருவப்படம் மற்றும் தேவநாகரி, ஆங்கில மொழியில் பொறிக்கப்பட்ட அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
அவரது பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டுகள் (1924 - 2018), அவரடு படத்திற்கு கீழே பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயம் ஆனது வெள்ளி (50%), தாமிரம் (40%), நிக்கல் (5%) மற்றும் துத்தநாகம் (5%) ஆகிய கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் எடை 135 கிராம் ஆகும்.
இந்த நாணயம் மையத்தில் அஷோகர் தூண் சிங்கம், "சத்யமேவா ஜெயேத்தே" என்னும் வாசகத்தையும் தாங்கி நிற்கிறது.
நாணயத்தின் இடது புறம் தேவநாகரியில் பொறிக்கப்பட்டிருக்கும் 'பாரத்', வலதுபுறம் ஆங்கில மொழியில் பொறிக்கப்பட்ட 'இந்தியா' என்னும் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.