Volkswagen நிறுவனத்திற்கு ₹100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்பற்ற முறையில் மாசுக்களை வெளிப்படுத்தியதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Volkswagen நிறுவனத்தின் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நாளை மாலை 5 மணிக்கும் ₹100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிரப்பித்துள்ளது.


மேலும், இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் Volkswagen நிறுவனத்தின் இந்திய மேலாண் இயக்குனர் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. மேலும் Volkswagen நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் உத்தரவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.



முன்னதாக கடந்த டிசம்பர் 3-ஆம் நாள் மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறியதாக டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ₹25 கோடி அபராதம் விதத்தது குறிப்பிடத்தக்கது.


குறிப்பு : தலைநகர் டெல்லியில் காற்றின் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன புகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரமும் குறைந்து வருகிறது. இதையடுத்து, காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவு எண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றது. எனினும் காற்று மாசு குறைந்தபாடில்லை.