மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ₹ 25 கோடி அபராதம் விதித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைநகர் டெல்லியில் காற்றின் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன புகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரமும் குறைந்து வருகிறது. இதையடுத்து, காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவு எண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றது. எனினும் காற்று மாசு குறைந்தபாடில்லை.


இதன் காரணமாக டெல்லிக்குட்பட்ட பல பகுதிகளில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், சரியான நடவடிக்கைகள் மூலம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறியதற்கு டெல்லி அரசு பொருப்பேற்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆம் ஆத்தி தலைமையிலான அரசுக்கு ₹25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது.


அபராதமாக விதிக்கப்பட்ட இந்த பணத்தினை டெல்லி அரசு பனியாளர்களின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்களிடம் இருந்தும் பிடித்தம் செய்து இந்த தொகையை செலுத்துமாறும் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.


இந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மாதந்தோறும் ₹10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது