புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாளும் மருத்துவர்களின் பங்களிப்பை தேசிய மருத்துவர்கள் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இந்த தொற்றுநோய்க்கு எதிராக போரில் முதன்மை வீரர்களாக மருத்துவர்கள் பணியாற்றி உள்ளனர். மருத்துவர்கள் பணியை பார்த்து இந்தியா பெருமைப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவர்கள் கடவுளின் மற்றொரு வடிவம் - பிரதமர்
பிரதமர் மோடி (Narendra Modi) பேசுகையில்,  எத்தனையோ பேர் தங்கள் வாழ்க்கை ஏதேனும் நெருக்கடியில் இருந்த போதும், ஏதேனும் நோய் அல்லது விபத்துக்கு ஆளானவர்கள். சில சமயங்களில் நம்முடைய உறவினர் மற்றும் நமக்கு ஏதாவது நடந்துவிடுமா? என அச்சத்தில் இருந்தவர்களுக்கு மருத்துவர்கள் ஆற்றிய பணி மிகவும் இன்றியமையாதது. இதனால் தான் டாக்டர்கள் கடவுளின் மற்றொரு வடிவம் என்று கூறப்படுகிறார்கள். அவர்களை அப்படி அழைப்பது தான் சிறந்தது என்றார்.


பிரதமர் மோடி, இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றிய போது, ​​நாட்டின் பல மருத்துவர்களும் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். நான் அவர்களுக்கு எனது தாழ்மையான அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, நாடு கொரோனாவுக்கு எதிராக போராடி வரும்போது, ​​மருத்துவர்கள் இரவும் பகலும் கடினமாக உழைத்து மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர் என்றார்.


ALSO READ | உலகின் பழமையான தமிழ் மொழியின் ரசிகன் நான்: பிரதமர் மோடி


சுகாதார உள்கட்டமைப்பு பலப்படுத்தப்படும்:
பிரதமர் மேலும் கூறுகையில், "சுகாதார வசதிகள் (Health Infrastructure) இல்லாத பகுதிகளில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ .50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாத திட்டத்தை (Credit Guarantee Scheme) கொண்டு வந்துள்ளோம். இந்த ஆண்டு, சுகாதாரத் துறைக்கான பட்ஜெட்டின் ஒதுக்கீடு இரு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது. அதாவது இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்.


மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு:
நாட்டில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் சுமார் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது என்றார். இதன் காரணமாக, இவ்வளவு குறுகிய காலத்தில், இளங்கலை படிப்புகளின் இருக்கை ஒன்றரை மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. முதுகலை பட்டதாரி படிப்புகளில் 80 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் 2014 வரை 6 எய்ம்ஸ் மட்டுமே இருந்த நிலையில், இந்த 7 ஆண்டுகளில் 15 புதிய எய்ம்ஸ் (AIIMS) பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என பிரதமர் (Narendra Modi) தெரிவித்தார்.


டாக்டர் ராயின் நினைவாக மருத்துவர் தினம்:
டாக்டர் பிதன் சந்திர ராயின் நினைவாக தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. சமூகத்திலிருந்து நோய்களை அகற்றுவதற்கும் மருத்துவ அறிவியலை முன்னேற்றுவதற்கும் டாக்டர் ராய் (Dr Bidhan Chandra Roy) ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்திருந்தார். மருத்துவ துறையில் பல்வேறு சேவை மற்றும் சாதனை செய்துள்ளதால் அவரது நினைவாக இவரின் பிறந்த தினத்தை தேசிய மருத்துவர்கள் தினமாக (National Doctors Day in India) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் இரண்டும் ஜூலை 1 ஆம் தேதி ஆகும்.


ALSO READ | நாட்டில் தடுப்பூசி போடப்படும் வேகம் மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR