காராஷ்டிரா சச்சரவு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் நவாப் மாலிக் வெள்ளிக்கிழமை பாரதீய ஜனதா அரசாங்கத்தை அவதூறாகக் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலத்தில் நிலவும் அரசியல் நாடகம் குறித்து விமர்சித்த அவர், "ஜனாதிபதியின் ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் புதுடில்லியில் இருந்து மகாராஷ்டிராவில் ஆட்சி நடத்த விரும்புகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.



மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தனது கருத்துக்களை தெரிவிக்க ட்விட்டருக்கு சென்ற அவர் இதுகுறித்து குறிப்பிடுகையில், "இது அரசுக்கு அவமானம், மக்கள் இதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் ’மகாராஷ்டிரா ஒருபோதும் டெல்லிக்கு முன் தலைவணங்காது’, என்று குறிப்பிட்டுள்ளார்.


மகாராஷ்டிராவில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜக-வும் சிவசேனாவும் கடுமையான அதிகார மோதலில் ஈடுப்பட்டு வருகின்றன. சிவசேனா 50:50 சூத்திரத்தின் கீழ் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதில் பிடிவாதமாக உள்ளது, அதன்படி இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முதலமைச்சரைக் கொண்டிருக்க வேண்டும் என சிவசேனா நிர்பந்திக்கிறது. இருப்பினும், மகாராஷ்டிராவின் தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, 50:50 சூத்திரத்தை கைவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸை முதல்வராக நியமிக்க வேண்டும் என பிடிவாதம் காட்டி வருகிறது.


இச்சச்சரவுக்கு மத்தியில், பாஜகவும், சிவசேனாவும் அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோரலுக்கு வெளிப்புற ஆதரவை எதிர்பார்த்து வருகின்றன என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்தார். பின்னர், NCP சேனாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கவில்லை என்று பவார் தெளிவுபடுத்தினார். எதிர்க்கட்சியில் அமர மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கியதாகவும் தாங்கள் அந்த முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் பவார் குறிப்பிட்டார். 


மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 105 இடங்களை வென்றதன் மூலம் பாஜக ஒற்றை மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. எவ்வாறாயினும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், பாஜக-வால் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியவில்லை. இதற்கிடையில், சிவசேனாவுக்கு 56 இடங்கள் கொண்டு, மாநிலத்தில் அதிகார பகிர்வுக்காக காத்திருக்கிறது. இருகட்சிகளுக்கு இடையே நீடிக்கும் ஒப்பந்த இழுபறி, மாநிலத்தில் சட்டமன்றம் அமைப்பதற்கு காலதாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.