இந்தியாவில் முப்பதாயிரத்தை நெருக்கும் கொரோனா தொற்று; இறப்பு எண்ணிக்கை 937 ஆக உயர்வு
ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமை இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, இப்போது நாட்டில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட 22,010 பேர் செயலில் உள்ளனர்.
புது டெல்லி: ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமை இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, இப்போது நாட்டில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட 22,010 பேர் செயலில் உள்ளனர். அதே நேரத்தில் இதுவரை 937 பேர் இறந்துள்ளனர். 7,026 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில், 1,594 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மற்றும் 51 பேர் இறந்துள்ளனர்.
முன்னதாக செவ்வாயன்று, சுகாதார அமைச்சகம், பிளாஸ்மா சிகிச்சை உட்பட COVID-19 சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை என்று கூறியது. "பிளாஸ்மா சிகிச்சை சோதனை நிலையில் உள்ளது. ஆனால் இது COVID-19 க்கான சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்று கூற போதுமான ஆதாரங்கள் இதுவரை இல்லை" என்று இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் மீட்பு விகிதம் 23.3 சதவீதமாக உள்ளது என்றும், இது "முற்போக்கான அதிகரிப்பு" என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "கடந்த 28 நாட்களில் 17 மாவட்டங்களில் இருந்து COVID-19 இன் புதிய தொற்று எதுவும் பதிவாகவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
இன்றைய முக்கிய சம்பவங்கள்:
1. டெல்லியில் செவ்வாய்க்கிழமை 12 சிஆர்பிஎஃப் ஜவான்களுக்கு செய்யப்பட சோதனையில் கோவிட் -19 தொற்று இருப்பது தெரியவந்துளது.
2. செவ்வாயன்று தாராவி பகுதியில் இருந்து 4 இறப்புகள் மற்றும் 42 புதிய COVID-19 நேர்மறை தொற்று பதிவாகியுள்ளன. இப்பகுதியில் 330 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 18 ஆகவும் உள்ளது
3. குஜராத்தில் செவ்வாய்க்கிழமை 226 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இது மாநிலத்தில் 3,774 ஆக உள்ளது.
4.கொரோனா 19 தொற்று பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 10.2 நாட்களாக இருப்பதாக சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது.
6. தமிழகத்தில் இதுவரை 1128 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.
7. வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறது மத்திய அரசு.
8. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து நான்கு கோவிட் -19 நோயாளிகள் குணமடைந்து இந்த்ற்று வெளியேற்றப்பட்டனர்.
இப்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயின் பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது.
9. கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும் என முதல்வர் பழனிசாமி கூறினார்.
10. ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து ஜூலை 31 வரை வேலை செய்யலாம் என மையம் அரசு அறிவித்தது.