இன்று டெல்லியில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்திய அளவிலான மருத்துவ பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விரிவாக பார்போம்:


மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க பொது நுழைவுத்தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது. மருத்துவம் சார்பாக நடைபெறும் நுழைவுத் தேர்வை எதிர்த்து மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன. ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகள் நடத்த முடியாது எனவும், மத்திய அரசுக்கு தான் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.


நுழைவுத் தேர்வுகளின் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட பட்டதால். இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான பொதுநுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகியது. 



இது பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிருப்தியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு மாநில எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். பொது நுழைவுத்தேர்வை நிறுத்தி வைப்பதற்கான அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கூறினார்கள்.


மத்திய அரசு இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா தலைமையில் திங்கட்கிழமை நடைத்தியது. அதில் ஜூலை மாதம் நடைபெறுவதாக உள்ள நுழைவுத்தேர்வை அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போடும் வகையில் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இன்று பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கபட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்சி அடைந்துள்ளனர்.