புதுடெல்லி: மே 21ஆம் தேதி நடைபெறவிருந்த நீட்-பிஜி 2022 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. ஜே டிஒய் சந்திரசூட் தலைமையிலான சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2022க்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET PG 2022) ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று கோரிய மருத்துவர்களின் மனு இது. இந்த மனு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் NEETPG 21 கவுன்சிலிங்குடன் மோதல்போக்கை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.  


மூத்த வழக்கறிஞர் ராகேஷ் கண்ணா இந்த மனுவை அவசரமாகப் பட்டியலிடக் கோரியதைத் தொடர்ந்து, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக அறிவித்திருந்தது.



வழக்கறிஞர்கள் அசுதோஷ் துபே மற்றும் அபிஷேக் சவுகான் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவர்களின் மனுவில், “மனுதாரர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தங்களுக்குத் தேவையான இன்டர்ன்ஷிப்பைச் செய்து வரும் மருத்துவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மனுதாரர்கள் தங்கள் தரவரிசை, தேர்வு மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மருத்துவ அறிவியலின் வெவ்வேறு கிளைகளின் கீழ் தங்களுக்கு கிடைக்கக்கூடிய விருப்பத் தெரிவுகளின்படி தங்களின் தொழில் விருப்பத்தைத் தேர்வுசெய்யும் நோக்கத்திற்காக மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள NEET-PG தேர்வு 2022 இல் கலந்துக்கொள்ள விரும்புகிறார்கள். .


மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் பிப்ரவரி 4 அன்று நீட் பிஜி-2022 தேர்வு மே 21 அன்று நடைபெறும் என்று அறிவித்தது.


மேலும் படிக்க | NEET PG 2022: இந்த தேதியில் வெளியாகிறதா ஹால் டிக்கெட்
 
சில மனுதாரர்கள் மற்றும் ஆர்வலர்கள் NEET-PG கவுன்சிலிங் செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள். எனவே அவர்கள் பணிச்சுமையின் காரணமாக தேர்வை ஒத்திப்போடக் கோருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


"மனுதாரர்கள் மற்றும் பிற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இந்த அமைப்பால் பாதிக்கப்படுகின்றனர்", என்று மனுவில் கூறப்பட்டுள்ளது, எம்பிபிஎஸ் படிப்புகளை முடித்த 15 மருத்துவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். 
NEET-PG 2022 தேர்வாளர்கள்/தேர்வுதாரர்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் 2022 NEET-PG தேர்வில் பங்கேற்க நியாயமான வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பது ஏன் என மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.   


முன்னதாக COVID-19 தொற்றுநோயின் மூன்றாவது அலையின் அச்சங்களுக்கு மத்தியில், மத்திய சுகாதார அமைச்சகம் NEET PG தேர்வை 2022 நுழைவுத் தேர்வை 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.


2022 ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி ஆறு MBBS மாணவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.


2022 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET PG 2022) தேர்வை ஒத்திவைக்கக் கோரிய இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்னரே மத்திய அரசு நுழைவுத்தேர்வை ஒத்திவைத்தது நினைவுகூரத்தக்கது.


மேலும் படிக்க | நீட் விவகாரத்தில்  தமிழக அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR