இந்தியாவின் எல்லையில் 89 புதிய எல்லை புறக்காவல் நிலையங்களை உருவாக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லிபுலேக்-கர்பதர் பாதை வழியாக இந்தியா சீனா எல்லையை அடைந்தவுடன் நேபாளத்தின்(Nepal) அணுகுமுறை பெருகிய முறையில் கசப்பாகி வருகிறது. முதலில் அதன் வரைபடத்தில் மூன்று இந்திய பிராந்தியங்களை உள்ளடக்கியது, இப்போது அது இந்தியாவின் எல்லையில் 89 புதிய எல்லை புறக்காவல் நிலையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. சுமார் பத்தாயிரம் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படைகளை அனுப்பும் திட்டங்களும் இதில் அடக்கம்.


READ | ஆட்டம் காணும் நேபாள பிரதமரின் பதவி, ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக இந்தியா மீது குற்றச்சாட்டு...


இந்த BOP(எல்லை புறக்காவல் நிலையங்களில்), காஞ்சன்பூர் மாவட்டத்தில் எட்டு BOP கள், தாதேல்துராவில் மூன்று, கைலாலியில் ஒன்று மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் குமாவோனின் எல்லையில் உள்ள பைடாடியில் ஒன்று அமைக்கப்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே, கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக, நேபாள ஆயுதக் காவல்படையின் IGP தர்ச்சுலா, காவல்நிலைய கட்டுமானப் பணிகளைப் பார்வையிட வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் நேபாளி ராணுவத் தலைவருடன் சந்திப்பு நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக நேபாளத்திலிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்கள் படி நேபாளமும் இங்கு இராணுவ நடவடிக்கைகளை வேகமாக அதிகரிக்கும் எனவும், BoP உடன், ஆயுதப்படைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முயற்சிக்கிறது எனவும் தெரிகிறது.


READ | சீனா, நேபாளத்தை அடுத்த தற்போது பூட்டானும் இந்தியாவின் தலைவலியாக மாறுகிறதா?


  • சீனா எல்லையிலும் விழிப்புணர்வு


நேபாள உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, சீனாவுடனான வடக்கு எல்லையில் உள்ள தபல்ஜங் மற்றும் ஓலாங்சுங்கில் தலா ஒரு BoP செய்யப்படும். சமீபத்தில், ஆயுதப்படைகள் சீனப் பக்கத்தில் ஹம்லா மற்றும் ஹில்சா நாகாவிலும் BOP களை நிறுவியுள்ளன. தகவல்கள் படி நேபாளம், இந்திய எல்லையில் ஒவ்வொரு 3.5 கி.மீ தூரத்திலும் ஒரு BoP அமைக்க தயாராகி வருகிறது.