சீனா, நேபாளத்தை அடுத்த தற்போது பூட்டானும் இந்தியாவின் தலைவலியாக மாறுகிறதா?

கடந்த சில நாட்களாக இந்தியா தனது அண்டை நாடுகளுடன் மோசமாக போராடி வருகிறது. அந்தவகையில் கடந்த சில வாரங்களாக சீனா மற்றும் நேபாளத்துடன் எல்லை மோதலில் ஈடுப்பட்டு வருகிறது,. இந்நிலையில் தற்போது பூட்டான் இந்த வழியில் இணைந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 26, 2020, 12:16 PM IST
  • சில மாதங்களுக்கு முன்னர் பூட்டான், சுற்றுலாப் பயணிகளாக வரும் இந்தியர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்க முடிவு செய்தது.
  • பூட்டான் நாட்டின் இந்த முடிவு அஸ்ஸாமின் பக்ஸா மாவட்ட விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கியது.
  • மேலும் இந்த முடிவு பூட்டான் நோக்கி தண்ணீருக்காக செல்லும் அஸ்ஸாமின் விவசாயிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
சீனா, நேபாளத்தை அடுத்த தற்போது பூட்டானும் இந்தியாவின் தலைவலியாக மாறுகிறதா? title=

கடந்த சில நாட்களாக இந்தியா தனது அண்டை நாடுகளுடன் மோசமாக போராடி வருகிறது. அந்தவகையில் கடந்த சில வாரங்களாக சீனா மற்றும் நேபாளத்துடன் எல்லை மோதலில் ஈடுப்பட்டு வருகிறது,. இந்நிலையில் தற்போது பூட்டான் இந்த வழியில் இணைந்துள்ளது.

இந்திய எல்லை நாடுகளான நேபாளம் அல்லது பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் அல்லது சீனா எந்த நாடாக இருந்தாலும், எல்லை பிரச்சனை விஷயத்தில் மற்றொரு அண்டை நாடான பூட்டானில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவுக்கும் இடையிலான உறவும் முற்றிலும் வேறுபட்டுள்ளது. 

READ | கால்வன் பள்ளத்தாக்குக்குப் பிறகு இந்தியாவின் மற்றொரு பிராந்தியத்தை குறிவைக்கும் சீனா...

சில மாதங்களுக்கு முன்னர் பூட்டான், சுற்றுலாப் பயணிகளாக வரும் இந்தியர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்க முடிவு செய்தது. பூட்டான் நாட்டின் இந்த முடிவு அஸ்ஸாமின் பக்ஸா மாவட்ட விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கியது. மேலும் பூட்டான் நோக்கி தண்ணீருக்காக செல்லும் அஸ்ஸாமின் விவசாயிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதன் காரணமாக பூட்டான் அரசாங்கம் நாட்டிற்குள் பிற நாட்டினர் நுழைவதைத் தடைசெய்ததுள்ளதாகவும், பூட்டானில் இருந்து உருவாகும் ஆறுகளின் நீரை இந்திய விவசாயிகள் பயன்படுத்துவதை தடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

பக்ஷா மாவட்டத்தின் 26-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 6000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த நீர்ப்பாசன ஆதாரத்தை (உள்நாட்டில் டாங் என்று அழைக்கப்படுகிறது) நம்பியுள்ளனர். 1953 முதல், இங்குள்ள விவசாயிகள் பூட்டானில் இருந்து உருவாகும் ஆறுகளின் நீரால் தங்கள் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பூட்டானில் இருந்து திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டதால் இந்திய விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர் எனவும் குறிப்பிடப்பட்டது.

READ | சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்திய ராஜீவ் காந்தி...

எனினும், பூட்டானில் இருந்து இந்திய மாநிலமான அசாமுக்கு நீரின் ஓட்டம் தொடர்கிறது, உள்ளூர் மக்கள் நீர்ப்பாசன தடங்கள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்கின்றனர். பூட்டானிய நிதி அமைச்சர் நம்கே ஷெரிங் தனது பேஸ்புக் பதிவில், தனது நாட்டின் அதிகாரிகள் தங்கள் இந்திய நண்பர்களுக்கு உதவுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர் என தெளிவு படுத்தியுள்ளார்.

அசாமுக்கு நீர் சீராக வருவதை உறுதி செய்வதற்காக பூட்டானிய தரப்பு சேனல்களில் பழுதுபார்க்கிறது. பூட்டானிய அதிகாரிகள் - மாவட்ட நிர்வாகம், உட்பிரிவு நிர்வாகம், மேயர் அலுவலகம், COVID19 பணிக்குழுவின் உறுப்பினர்கள், அரசு ஊழியர்களின் தன்னார்வலர்கள், பூட்டானின் உள்ளூர் சமூகங்களின் உறுப்பினர்கள் கடந்த 3 மாதங்களாக இதைச் செய்து வருகின்றனர், இதனால் இந்திய மாநிலத்திற்கு நீர் வழங்கல் தொடர்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நீர்ப்பாசன தடத்தை எல்லையைத் தாண்டி விவசாயிகள் பராமரித்து வந்தனர். இருப்பினும், COVID-19 நிலைமை மற்றும் எல்லையைத் தாண்டி நகர்வதற்கான கட்டுப்பாடுகள் காரணமாக, நீர்ப்பாசன வழித்தடத்தை பராமரிக்க இயலாமல் போனது. இதனையடுத்து பூட்டானிய அதிகாரிகளும் உள்ளூர் சமூகங்களும் நீர்ப்பாசன தடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுத்தனர்.

அசாமின் எல்லையான பூட்டானிய துணை மாவட்டமான ஜோமோத்ஷங்கா துங்காக், இந்திய விவசாயிகளுக்கு நீர்ப்பாசன கால்வாய்களை பராமரிக்கிறது. உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இதுவரை ஒன்பது நீர்ப்பாசன தடங்கள் மற்றும் இரண்டு குடிநீர் ஆதாரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன, அவை இந்திய தரப்புக்கு போதுமான தண்ணீரை வழங்கி வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Trending News