புதுடெல்லி: ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி உற்பத்தியாளர் Biological-E நிறுவனத்துடன் 30 கோடி கோவிட் -19 தடுப்பூசி டோஸ்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரா அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இவை இந்த ஆண்டு ஆகஸ்ட் தொடங்கி டிசம்பருக்குள் உற்பத்தி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கான முன்பணமாக மத்திய அரசு Biological-E நிறுவனத்துக்கு 1,500 கோடி ரூபாயை செலுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்குப் பிறகு இது இந்தியாவில் தயாரிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி ஆகும்.


RBD புரத துணை அலகு தடுப்பூசியான, Biological-E-இன் COVID-19 தடுப்பூசி, தற்போது கட்டம் -3 மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளது.


COVID-19 தடுப்பூசி (Vaccine) செலுத்தலுக்கான தேசிய நிபுணர் குழுவால் (NEGVAC) மேற்கொள்ளப்பட்ட உரிய ஆய்வுக்குப் பின்னர் M / s Biological-E-இன் முன்மொழிவு ஆராயப்பட்டு ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ALSO READ: கொரோனா இரண்டாவது அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு


Biological-E-இன் கோவிட் தடுப்பூசிக்கான ஆய்வுகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இந்திய அரசாங்கம் ஆரம்ப கட்டம் முதல் மூன்றாம் கட்ட ஆய்வுகள் வரை ஆதரவு அளித்துள்ளது என்றும், உயிரி தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology) ரூ .100 கோடிக்கு மேல் மானிய உதவியாக நிதி உதவியை வழங்கியதோடு மட்டுமல்லாமல், ஃபரிதாபாத்தில் உள்ள அதன் ஆராய்ச்சி நிறுவனமான THSTI மூலம் அனைத்து விலங்கு சோதனைகள் மற்றும் மதிப்பீட்டு ஆய்வுகளையும் நடத்த ஆதரவு அளித்து உதவியது என்று அமைச்சகம் கூறியுள்ளது. 


"இது இந்திய அரசின் 'மிஷன் கோவிட் சூரக்ஷா - இந்திய கோவிட் -19 (COVID-19) தடுப்பூசி மேம்பாட்டு மிஷன்' இன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டம் 3.0-ன் மூன்றாவது ஊக்குவிப்பு தொகுப்பின் ஒரு பகுதியாக, கோவிட் -19 தடுப்பூசி மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்தவும் துரிதப்படுத்தவும் இது தொடங்கப்பட்டது." என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. 


தற்போது இந்தியாவில் ​​மூன்று கோவிட் தடுப்பூசிகள் கிடைக்கின்றன. அவை, ஆக்ஸ்போர்டு-சீரம் நிறுவனங்களின் கோவிஷீல்ட் (Covishield), பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் ரஷ்ய ஸ்பூட்னிக் வி ஆகியவை ஆகும்.


மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, இதுவரை நாட்டில் 22,10,43,693 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


ALSO READ: DRDO's 2-DG: கோவிட் எதிர்ப்பு மருந்தை பயன்படுத்தும் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR