New Labour Laws: கூடுதல் நேரம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு Good News
புதிய தொழிலாளர் சட்டத்தை அடுத்த நிதியாண்டில் செயல்படுத்தும் முனைப்பில் இந்திய தொழிலாளர் நல அமைச்சகம் (Ministry of Labour) தயாராகி வருகிறது. அதற்கான இறுதி கட்ட செயல்முறைகள் நடைபெற்று வருகின்றன.
புதுடெல்லி: புதிய தொழிலாளர் சட்டத்தை அடுத்த நிதியாண்டில் செயல்படுத்தும் முனைப்பில் இந்திய தொழிலாளர் நல அமைச்சகம் (Ministry of Labour) தயாராகி வருகிறது. அதற்கான இறுதி கட்ட செயல்முறைகள் நடைபெற்று வருகின்றன.
புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்னர், நாட்டின் தொழிலாளர் சந்தையில் ஒரு ஊக்கம் பிறக்கும். அதன் அடிப்படையில் புதிய தொழிலாளர் சட்டங்கள் காரணமாக எழுந்துள்ள சந்தேகங்களையும் அழிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஊழியர் 15 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்தாலும் கூட அது Overtime ஆக கணக்கிடப்படும். புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் தற்போதுள்ள கூடுதல் நேர வரம்பை அரசாங்கம் மாற்றக்கூடும், மேலும் திட்டமிடப்பட்ட நேரங்களுக்கு அப்பால் 15 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்தாலும் அது Overtime என்றே கருதப்படும்.
Also Read | தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதலமைச்சர்
இதற்காக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது, வேலை நேரம் முடிந்தபின், ஒரு ஊழியர் 15 நிமிடங்கள் அதிகமாக வேலை செய்தால், உங்கள் சம்பளத்தில் அந்த பணம் அதிகரிக்கும்.
தற்போதைய தொழிலாளர் சட்டங்களின்படி, Overtime நேர வரம்பு அரை மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத இறுதிக்குள் செயல்முறைகள் நிறைவடையும்
புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து தொழிலாளர் அமைச்சகம் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தியுள்ளது. அதோடு, புதிய சட்டம் தொடர்பான அனைத்து செயல்முறைகளும் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும். இதன் பின்னர், விதிகளை அமல்படுத்தும் செயல்முறை தொடங்கப்படும்.
Also Read | Aadhaar card update: mAadhaar செயலியில் 5 சுயவிவரங்களைச் சேர்ப்பதற்பது எப்படி?
PF மற்றும் ESI பற்றிய விதிகள்
புதிய சட்டத்தில், அனைத்து ஊழியர்களுக்கும் பி.எஃப் (PF) மற்றும் இ.எஸ்.ஐ (PF) போன்ற வசதிகள் கிடைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு நிறுவனமும் ஒப்பந்தக்காரர் (contractor) அல்லது மூன்றாம் தரப்பு மூலம் ஊழியரை பணியமர்த்தியதாக கூற மறுக்க முடியாது.
இது தவிர, ஒப்பந்தத்தின் கீழ் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு வேலை செய்பவர்களுக்கு முழு சம்பளம் கிடைக்கும். இந்த விதிகளை முதலாளிகள் ஏற்று நடப்பதும் உறுதி செய்யப்படும்.
Also Read | Cheap Recharge Plans: 100 ரூபாய்க்கும் குறைவான ஏர்டெல், ஜியோ ரீசார்ஜ்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR