புதுடெல்லி: ஆதார் அட்டையின் mAadhaar செயலியில் 5 சுயவிவரங்களைச் சேர்க்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் அறிவித்தது.
ஆதார் அட்டைதாரர்கள் இப்போது mAadhar செயலியில் ஐந்து பயனர் சுயவிவரங்களைச் சேர்க்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்தது. அதை எப்படி செய்வது என்பதற்கான சுலபமான வழிமுறைகளைத் தெரிந்துக் கொள்வோம்.
முதலில் உங்கள் தொலைபேசியில் இருக்கும் mAadhar செயலியை புதுப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI)) ஒரு டிவிட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ளது. அதில், "உங்கள் #mAadhar app செயலியில் 5 பயனர் சுயவிவரங்களை நீங்கள் சேர்க்கலாம். ஆதார் வைத்திருப்பவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அங்கீகாரம் அனுப்பப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can add up to 5 Aadhaar profiles in your #mAadhaar app. OTP for authentication is sent to the registered mobile number of the Aadhaar holder. Download and install the #NewmAadhaarApp from: https://t.co/62MEOf8J3P (Android) https://t.co/GkwPFzM9eq (iOS) pic.twitter.com/gapv443q72
— Aadhaar (@UIDAI) February 12, 2021
பயனர்கள் ஆதார் அட்டையுடன் தொடர்புடைய விவரங்களை உள்ளிட வேண்டும், அதன்பிறகு OTP ஐ வழங்க வேண்டும்.
இந்த செயல்பாட்டில் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டால், செயலியை நீக்கி விட்டு, மீண்டும் கூகிள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து மீண்டும் செயலியை நிறுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Also Read | ஆதார் விவரங்கள் leak ஆனால் ஆபத்தா? குழப்பத்தை தீர்த்தது UIDAI
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR