நாடாளுமன்ற கட்டட திறப்புவிழா சர்ச்சைகள்! மடாதிபதிகள் உள்ளே குடியரசு தலைவர் வெளியே!
Decomcracratic Country: புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு குறித்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நியூடெல்லி: இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆகையால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்த மத்திய அரசு ,ராஜபாதை சீரமைப்பு , துணை குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் உள்ளிட்டவை அடங்கிய அடங்கிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டியுள்ளது.
சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக கட்டப்பட்டு வரும், இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், இப்பொழுதிருக்கும் நாடாளுமன்ற கட்டிடத்தைத் தான் மியூசியம் ஆக்கப்போவதாக சொன்னார்கள். ஆனால் மியூசியத்தில் இருக்கும் பொருளை புதிய கட்டிடத்தில் கொண்டுவந்து வைக்கிறார்கள். துவக்கமே அமர்க்களம். மடாதிபதிகள் உள்ளே, குடியரசுத்தலைவர் வெளியே...இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
மேலும் படிக்க - புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா... 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு..!
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக அறிவித்துள்ளது.
இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட 19 கட்சிகள் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
நாடாளுமன்ற புதிய கட்டடம் திறந்து வைக்கப்படும் நாள், விநாயக் தாமோதர் சாவர்க்கரின் 140வது பிறந்த ஆண்டு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் இறுதிச் சடங்கும் மே 28ம் தேதியன்று நடைபெற்றது.
எனவே, வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் கூட, சாவர்க்கரைப் போற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நடவடிக்கையாகவே புதிய நாடாளுமன்ற திறப்புவிழா நாள் குறிக்கப்பட்டுள்ளதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அதேபோல, ஜனநாயக நாட்டில், முதல் குடிமகனான குடியரசுத்தலைவரைக் கொண்டு நாடாளுமன்ற கட்டடம் திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் உரத்தக் குரலில் ஒலிக்கும் நிலையில், அதை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை.
அதோடு, மதசார்பற்ற நாட்டில், இந்து மதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மடாதிபதிகளுக்கு நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதன் அடிப்படையில் மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டடம்: விவரங்கள்
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானம் 2021ஆம் ஆண்டு தொடங்கியது
65000 சதுர மீட்டர் பரப்பளவில் ,971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது இந்தியாவின் புதிய பாராளுமன்றம்
மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமர முடியும்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டு அமர்வில் 1272 உறுப்பினர்கள் அமரலாம்
மக்களவையின் வடிவமைப்பின் மையக்கருத்து தேசிய பறவையான மயில், மாநிலங்களவையின் வடிவமைப்பு தேசிய மலர் தாமரை
புதிய நாடாளுமன்ற கட்டிடம் கிட்டத்தட்ட முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீசக்ரத்தில் உள்ள மையம், மூல பிந்து முக்கோண வடிவம் என்பதை நினைவில் கொள்ளலாம். மேலும், பிரம்ம முகூர்த்தத்தில் வேதங்கள் முழங்க யாக வேள்விகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இந்த பொறுப்பினை சிருங்கேரி சாரதா பீடத்தை சார்ந்த மடத்தவர் வசம் ஒப்படைத்திருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | ₹75 நினைவு நாணயம் வெளியீடு! நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்புவிழா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ