பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் கூட்டம், இன்று மாலை நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் கூட்டம், இன்று மாலை நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். இதையடுத்து, அமைச்சரவையின் முதல் கூட்டம், இன்று மாலை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல் கூட்டத் தொடரில், புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர். முதல் கூட்டத் தொடர், ஜூன் 6-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நடைபெறும். மேலும் புதிய அரசின் கொள்கைகள், திட்டங்கள், பட்ஜெட் போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.