ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் நாடு புதிய மாற்றத்துக்கு வித்திட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா பார்லிமென்டில் விவாதம் நடந்தது. லோக்சபாவில் நடந்த விவாதத்தில் மசோதா குறித்த பயன்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கி உரையாற்றினார்.


இதையடுத்து ஜிஎஸ்டி திருத்த மசோதாவுடன் இணைந்த 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.


நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்கள்:


1. மத்திய ஜிஎஸ்டி மசோதா
2. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் சட்ட மசோதா
3.ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மசோதா
4. யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி மசோதா


இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரதமர் நரேந்திர மோடி புதிய சட்டத்தால் நாடு புதிய இலக்கை நோக்கியுள்ளதாக தனது டிவிட்டர் பாகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 


இதே போன்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி நாட்டின் முன்னேற்றத்துக்கு ஜிஎஸ்டி நடவடிக்கை அவசியம் என்று தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி-யால் நாடு மேலும் வலுப்பெறும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.